7.5% இட ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது - மருத்துவ கல்வி இயக்குநரகம் உத்தரவு. - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, August 5, 2023

7.5% இட ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது - மருத்துவ கல்வி இயக்குநரகம் உத்தரவு.



எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்புகளில் 7.5% இட ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது என அனைத்து அரசு மற்றும் தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரி முதல்வர்களுக்கு மருத்துவ கல்வி இயக்குநரகம் உத்தரவு.

கல்வி கட்டணம், தேர்வு கட்டணம், விடுதி கட்டணம், உபகரணங்களுக்கான கட்டணம் உள்ளிட்ட எதையும் வசூலிக்கக் கூடாது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை. Medical Education MBBS BDS Students admission in Government and Self-financing Medical and Dental Colleges for the Academic year 2023-2024 - certain instructions - issued- Regarding.

Ref: G.O.(Ms). No.496 Health and Family Welfare (H1) Department dated:30.11.2020.

All the Deans / Principals of Government and Self-financing Medical and Dental Colleges under the administrative control of this Directorate are requested to adhere to the following instructions and follow the routine process of admission for the academic year 2023-2024.

i) The Head of the Institutions are repeatedly instructed not to collect any type of essential fee such as Tuition fee, Special fee, Examination fee, Hostel fee including mess fee, Book fee, Basic material like white coat, Stethoscope, University Registration fee, Insurance, Misc., from the students getting admitted in their Institution, under the 7.5% preferential allotment of seats MBBS and BDS Seats in Government and Self-financing Medical and Dental Colleges and to follow the same procedure adopted in the last academic year for this academic year also. 7.5% இடஒதுக்கீடு: மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது!

மருத்துவப் படிப்பில் 7.5 சதவிகித ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களிடம் எவ்வித கட்டணமும் வசூலிக்கக்கூடாது என தமிழக அரசு அறிவித்துள்ளது.

7.5 சதவிகித ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களிடம் விடுதி, பயிற்சி, தேர்வு உள்ளிட்ட எந்தக் கட்டணமும் வாங்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அனைத்து அரசு, தனியார், சுயநிதி மருத்துவக் கல்லூரி முதல்வர்களுக்கு மருத்துவக் கல்வி இயக்குநரகம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

7.5 சதவிகித ஒதுக்கீட்டில் சேரும் மாணவிகள் புதுமைப் பெண் திட்டத்தில் பயன்பெற தகுதியுடையவர்கள் எனவும் உத்தரவிக் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.