தமிழ்நாடு பட்டதாரி - முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்துடன் 07.08.2023 அன்று கலந்துரையாட பள்ளிக் கல்வி இயக்குநர் அழைப்பு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, August 5, 2023

தமிழ்நாடு பட்டதாரி - முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்துடன் 07.08.2023 அன்று கலந்துரையாட பள்ளிக் கல்வி இயக்குநர் அழைப்பு!

பள்ளிக் கல்வி - பள்ளிக் கல்வி இயக்குநர் தலைமையில் தமிழ்நாடு பட்டதாரி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் அமைப்பின் பொறுப்பாளர்களுடன் கலந்துரையாடல் - அழைப்பு விடுத்தல் - சார்பாக.

பார்வை: தமிழ்நாடு பட்டதாரி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் கடிதம்

தமிழ்நாடு பட்டதாரி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழக கூட்டமைப்பின் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் சார்ந்து தங்களை அழைத்து கலந்துரையாடல் நடத்திட கோரிய வேண்டுகோள் கடிதம் பார்வையில் காணும் கடிதத்தின் வழியாக பெறப்பட்டுள்ளது.

மேற்கண்ட கோரிக்கையினை ஏற்று பள்ளிக் கல்வி இயக்குநர் தலைமையில் தமிழ்நாடு பட்டதாரி - முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழக பொறுப்பாளர்களுடன் 07.08.2023 அன்று பிற்பகல் 12.30 மணியளவில் பள்ளிக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் கலந்துரையாடல் நடைபெறவுள்ளதால் அன்றைய தினம் மேற்கண்ட சங்கத்தின் பிரதிநிதிகள் கலந்துகொள்ள தெரிவிக்கப்படுகிறது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு பட்டதாரி - முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழக சங்கத்தின் சார்பாக கலந்து கொள்ளவும், தங்களது சங்கத்தின் கருத்துக்களை தெரிவிக்கவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் தங்களது கருத்துக்கள் சார்பான விவரங்களை கூட்டம் நடைபெறும் நாளன்று அதன் நகலொன்றினை நேரில் சமர்ப்பிக்கவும் dse@tnschools.gov.in என்றமு கவரிக்கு இ.மெயில்வழியாக Soft Copy ஆக அனுப்பிடவும்தெரிவிக்கப்படுகிறது

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.