காலை உணவு திட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் செய்தி வெளியிட்ட தினமலர் பத்திரிகைக்கு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கண்டனம்! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, August 31, 2023

காலை உணவு திட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் செய்தி வெளியிட்ட தினமலர் பத்திரிகைக்கு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கண்டனம்!

மாணவர்களின் பசிப்பணி நீக்க தமிழக அரசு வழங்கும் காலை உணவு திட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் செய்தி வெளியிட்ட தினமலர் பத்திரிகைக்கு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறது



கிராமப்புற பகுதியில் படிக்கும் ஏழை மாணவர்கள் பசியின்றி கல்வி பயில வேண்டும் என்கிற உயரிய நோக்கத்தில், அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் காலை உணவு வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது

ஏழை குழந்தைகளின் வயிறு நிரம்புவதை பொறுத்துக் கொள்ள முடியாத சமத்துவத்துக்கும் சகோதரத்துவத்திற்கும் எதிரான செய்திகளை எப்போதும் வெளியிடும் தினமலர் பத்திரிக்கை இதுபோன்று கொச்சையாக செய்தி வெளியிட்டு ஆனந்தம் அடைகிறது. இரண்டு வேளை சாப்பிடுபவரும், மூன்று வேளை சாப்பிடுபவரும் கழிவறையை பயன்படுத்துவது உலக நியதி .

ஆனால் ஏழை பிள்ளைகள் உணவு உண்பதை, அரசு தாய் உள்ளதோடு உணவு வழங்குவதை இதுபோன்ற அநாகரிக வார்த்தைகளால் கொச்சைப்படுத்துகிற தினமலர் பத்திரிகைக்கு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு தனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.

ஏழை பிள்ளைகள் உணவு உண்பதை, அவர்கள் நிறைவான கல்வி பெறுவதற்கு , எதிரான மனநிலை, இன்னும் சமூகத்தில் தொடர்கிறது என்பதையே இது காட்டுகிறது.

தினமலர் பத்திரிகை தனது நடைமுறையை மாற்றிக் கொள்ள வேண்டும். தனது செயலுக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் இல்லையென்றால் தமிழக அரசு இது போன்ற செயல்களுக்கு கடும் நடவடிக்கை எடுத்து எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.



Dr.P. பேட்ரிக் ரெய்மாண்ட்
பொதுச்செயலாளர்
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.