காலை உணவுத்திட்டம்... பிரபல நாளிதழ் செய்திக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, August 30, 2023

காலை உணவுத்திட்டம்... பிரபல நாளிதழ் செய்திக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்



காலை உணவுத்திட்டம்... பிரபல நாளிதழ் செய்திக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்

காலை உணவு திட்டத்தை விமர்சிக்கும் வகையில் நாளிதழ் ஒன்று முகப்பு பக்கத்தில் வெளியிட்ட செய்தி சர்ச்சைக்குள்ளானது. அந்த நாளிதழுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக உணவு வழங்கிடும் முதல்வரின் காலை உணவு திட்டம் குறித்து விமர்சித்து செய்தி வெளியிட்ட பிரபல நாளிதழுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் தனது X பக்கத்தில் (முந்தைய டிவிட்டர்) கண்டனம் தெரிவித்துள்ளார். நகரப் பகுதிகளிலும், கிராம பகுதிகளிலும் காலையிலேயே பள்ளிக்கு செல்லக் கூடிய குழந்தைகள் அவசரத்திலும், குடும்ப சூழ்நிலை என பலவித காரணங்களுக்காக காலை உணவை சரிவர சாப்பிடுவதில்லை என அரசுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தியுள்ளது.

முதற்கட்டமாக கடந்த ஆண்டு செப்டம்பர் 15ல் தொடங்கப்பட்ட இத்திட்டமானது தற்போது தமிழகத்தின் அனைத்து பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் 18 லட்சம் மாணவ - மாணவியர் பயனடைகின்றனர்

பள்ளிக்கு காலை உணவு சாப்பிடாமல் மாணவர்கள் வருவதால் அவர்களுக்கு கல்வி கற்பதில் ஏற்படும் சிக்கல்கள் மற்றும் கல்வி இடைநிற்றலை தவிர்த்தல் போன்ற காரணங்களுக்காக இத்திட்டம் மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. தெலங்கானாவில் இருந்து வருகை தந்துள்ள அரசு அதிகாரிகள் இத்திட்டம் குறித்து அறிந்து இது எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை அறிந்துகொள்வதற்காக தற்போது சென்னையில் முகாமிட்டு ஆய்வு செய்து வருகின்றனர் உழைக்க ஓர் இனம் - உண்டு கொழுக்க ஓர் இனம் என மனுவாதிகள் கோலோச்சிய காலத்தில் 'எல்லார்க்கும் எல்லாம்' எனச் #சமூகநீதி காக்க உருவானதுதான் திராவிடப் பேரியக்கம்.

'சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியை மட்டும் கொடுத்து விடாதே' என்பதை நொறுக்கி, கல்விப்புரட்சியை உருவாக்கிய ஆட்சி…

இந்த நிலையில் காலை உணவு திட்டத்தை விமர்சிக்கும் வகையில் நாளிதழ் ஒன்று முகப்பு பக்கத்தில் வெளியிட்ட செய்தி சர்ச்சைக்குள்ளானது. அந்த நாளிதழுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் X பக்கத்தில் வெளியிட்டுள்ளதாவது, “உழைக்க ஓர் இனம் - உண்டு கொழுக்க ஓர் இனம் என மனுவாதிகள் கோலோச்சிய காலத்தில் 'எல்லார்க்கும் எல்லாம்' எனச் சமூகநீதி காக்க உருவானதுதான் திராவிடப் பேரியக்கம்.

'சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியை மட்டும் கொடுத்து விடாதே' என்பதை நொறுக்கி, கல்விப்புரட்சியை உருவாக்கிய ஆட்சி திராவிட இயக்க ஆட்சி.

இதையும் படிக்க | எவ்வளவு கேலி, கிண்டல்!! - 'மாணவர்களுக்கு டபுள் சாப்பாடு - ஸ்கூல் கக்கூஸ் நிரம்பி வழிகிறது' - தினமலம்(ர்) நாளிதழில் வந்த தலைப்பு செய்தி!

உழைக்க ஓர் இனம் - உண்டு கொழுக்க ஓர் இனம் என மனுவாதிகள் கோலோச்சிய காலத்தில் 'எல்லார்க்கும் எல்லாம்' எனச் #சமூகநீதி காக்க உருவானதுதான் திராவிடப் பேரியக்கம்.

'சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியை மட்டும் கொடுத்து விடாதே' என்பதை நொறுக்கி, கல்விப்புரட்சியை உருவாக்கிய ஆட்சி திராவிட இயக்க ஆட்சி.

நிலவுக்குச் சந்திரயான் விடும் இந்தக் காலத்திலேயே சனாதனம் இப்படியொரு தலைப்புச் செய்தியைப் போடுமானால், நூறு ஆண்டுகளுக்கு முன் என்ன ஆட்டம் ஆடியிருக்கும்? எளியோர் நிலை எப்படி இருந்திருக்கும்? இன்னமும் அந்த வன்மம் மறையவேயில்லை!

#தினமனு-வுக்கு எனது வன்மையான கண்டனங்கள்!

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.