நீட் தேர்வில் தொடர் தோல்வியால் மாணவர் தற்கொலை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, August 13, 2023

நீட் தேர்வில் தொடர் தோல்வியால் மாணவர் தற்கொலை

நீட் தேர்வில் தொடர் தோல்வியால் மாணவர் தற்கொலை

தனியார் நீட் தேர்வு பயிற்சி மையத்தில் பயின்று வந்த குரோம்பேட்டையைச் சேர்ந்த மாணவர் இருமுறை தோல்வியடைந்ததால் தற்கொலை

நன்றாக படித்த நண்பனின் மருத்துவ கனவு வீணாகிவிட்டதாக சக மாணவர் உருக்கம்

நீட் தேர்வில் தோல்வியுற்றதால் மாணவர் ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டதைத் தொடர்ந்து சோகத்தில் தந்தையும் உயிரை மாய்த்துக் கொண்டார்.

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவப் படிப்புகளில் சேர நீட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்று இருப்பது அவசியம். அந்த வகையில் கடந்த சில ஆண்டுகளாக நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 2023-24-ம் கல்வியாண்டு சேர்க்கைக்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 7ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வினை எழுத 20 லட்சத்து 87 ஆயிரத்து 449 மாணவர்கள் விண்ணப்பித்தனர். 499 நகரங்களில் அமைந்துள்ள 4,097 தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடத்தப்பட்டது.

நீட் தேர்வில் மொத்தம் 2 லட்சத்து 87 ஆயிரத்து 449 பேர் தேர்வெழுதினர். தமிழ்நாட்டை பொறுத்தவரையில் 95 ஆயிரத்து 824 மாணவிகள், 51 ஆயிரத்து 757 மாணவர்கள் என மொத்தம் ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 581 பேர் எழுதினார்கள்.

அதன்படி நீட் தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் 13ம் தேதி வெளியானது. இந்த நிலையில் குரோம்பேட்டை குறிச்சி நகரை சேர்ந்த செல்வம் என்பவரின் மகன் இருமுறை நீட் தேர்வு எழுதி தோல்வியுற்றதால் மருத்துவராக முடியாத மன விரக்தியில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.