மாணவர்களுக்கு உயர் தொழில் நுட்ப ஆய்வகம் மூலம் கணினி வாயிலாக மனநலம் மற்றும் வாழ்வியல் திறன் சார்ந்த பயிற்சி அளித்தல் சார்பாக SPD & SCERT இயக்குநரின் இணைச் செயல்முறைகள்! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, August 23, 2023

மாணவர்களுக்கு உயர் தொழில் நுட்ப ஆய்வகம் மூலம் கணினி வாயிலாக மனநலம் மற்றும் வாழ்வியல் திறன் சார்ந்த பயிற்சி அளித்தல் சார்பாக SPD & SCERT இயக்குநரின் இணைச் செயல்முறைகள்!



மாணவர்களுக்கு உயர் தொழில் நுட்ப ஆய்வகம் மூலம் கணினி வாயிலாக மனநலம் மற்றும் வாழ்வியல் திறன் சார்ந்த பயிற்சி அளித்தல் சார்பாக SPD & SCERT இயக்குநரின் இணைச் செயல்முறைகள்!

மாநிலத் திட்ட இயக்குநர், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மற்றும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் இணைச் செயல்முறைகள், சென்னை - 06.

நாள் 12.08.2023

பொருள்: மனநலம் மற்றும் வாழ்வியல் திறன் சார்ந்த பயிற்சி மாணவர்களுக்கு உயர்தொழில்நுட்ப ஆய்வகத்தின் மூலம் கணினி வாயிலாக அளித்தல் - சார்பு.

பார்வையில் கண்டுள்ள பள்ளிக்கல்வித்துறை சட்டமன்றப் பேரவை அறிவிப்பு 16 ல் "வளரிளம் பருவத்தினர் பெருந்தொற்றுக் காலத்தில் உளவியல் ரீதியாக பல்வேறு பிரச்சினைகளைச் சந்தித்துள்ளனர். அதனை ஈடுசெய்யும் வகையிலும், அவர்களின் சமூக மனவெழுச்சி நலனை மேம்படுத்தவும், நேர்மறை எண்ணங்களை உருவாக்கிடவும், மகிழ்ச்சியாகக் கற்றலில் ஈடுபடுவதற்கு ஏதுவாகவும், தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மனநலம் மற்றும் வாழ்வியல் திறன் பயிற்சிகள் வழங்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலுள்ள 44 கல்வியில் பின்தங்கிய வட்டாரங்களில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மனநலம் மற்றும் வாழ்வியல் திறன் சார்ந்த பயிற்சி 2022 2023 ஆம் கல்வியாண்டில் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக உருவாக்கப்பட்ட மாணவர் கையேட்டில் வடிவமைக்கப்பட்டுள்ள செயல்பாடுகளை தற்போது மின்னுருவாக்கம் (Digitalized) செய்து கல்வித் தகவல் மேலாண்மைத் தொகுப்பமைப்பு இணையதளத்தில் (EMIS)

பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து உயர்நிலை, மேல்நிலைப் நுட்ப ஆய்வகத்தின் மூலமாக பள்ளிகளில் அமைந்துள்ள உயர்த்தொழில் மாணவர்களுக்கு வழங்கிடத் திட்டமிடப்பட்டுள்ளது.

மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் இது முதுகலை சார்ந்து அரசு ஆசிரியர்களுக்கு குறுவள மையம் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர் நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் 9, 10ஆம் வகுப்புகளுக்குக் கற்பிக்கும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு, 29.08.2023 முதல் 31.08.2023 வரை நடைபெறும் குறுவள மையப் பயிற்சியில் மனநலம் மற்றும் வாழ்வியல் திறன் சார்ந்த பயிற்சி வழங்கப்படவுள்ளது. மேலும், ஆகஸ்ட் மாதம் முதல் பிப்ரவரி மாதம் முடிய கால அட்டவணைப்படி இப்பயிற்சி இணைப்பில் 2இல் கொடுக்கப்பட்டுள்ள செய்யப்பட்ட கட்டகங்களில் உள்ள வழங்கப்படவுள்ளது. மின்னுருவாக்கம் செய்திடத்தக்க நிமிடத்தில் செயல்பாடுகள் ஒவ்வொன்றும் 20 வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு செயல்பாடும் பின்வருமாறு 5 பகுதிகளை உள்ளடக்கியதாக இருக்கும். பகுதி : 1

காணொலி பாடம்: (Video Lesson) (2 நிமிடங்கள்)

வாழ்வியல் திறனை அறிமுகப்படுத்தும் வகையில் ஒவ்வொரு பயிற்சியும் காணொலி பாடத்துடன் தொடங்குகிறது. ஒரு குறிப்பிட்ட வாழ்வியல் திறனை மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் இயங்கு படக்கதைகளும் (Animation புரிதலை மதிப்பிடும் எளிய வகையிலான வினாக்களும் Story), வடிவமைக்கப்பட்டுள்ளன.

பகுதி : 2

தேவையான பொருள்கள்: (1 நிமிடம்) செயல்பாடு செய்வதற்கு தேவையான பொருள்களை கணினியின் துணையுடன் பெறத்தக்க வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் அதனை அங்கேயே தெரிவு செய்து கொள்ளலாம்.

பகுதி : 3

செயல்பாடு 1: அறிவுசார் செயல்பாடு: (5 நிமிடங்கள்) (Knowledge Based Activity) காணொலி பாடம் வாயிலாக புரிந்து கொண்டதை மதிப்பிடும் வகையில் அறிவு மற்றும் புரிதல் சார் செயல்பாடுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

செயல்பாடு 2: பயன்பாடு சார்ந்த செயல்பாடு: (5 நிமிடங்கள்) (Application Based Activity) மாணவர்களின் உயர் சிந்தனைத் திறன்களை வளர்க்கும் வாழ்க்கையோடு கலை தொடர்புடைய வடிவமைக்கப்பட்டுள்ளன.

அடிப்படையிலான வகையில் செயல்பாடுகள் பகுதி : 4

சற்றே சிந்திப்போமா? (1 நிமிடம்) ஒவ்வொரு பாடப்பகுதியின் செயல்பாடுகளைத் தொடர்ந்து மாணவர்கள் மீள் கொணரும் வகையில் பாடச்சுருக்கம் புரிந்துகொண்ட வழங்கப்பட்டுள்ளது.

திறனை

பகுதி : 5 :

பிரதிபலிப்பு மற்றும் மதிப்பீடு: (6 நிமிடங்கள்) இப்பகுதியில் மாணவர்கள் தாங்கள் கற்றதைப் பிரதிபலிக்கும் விதமாக. எளிய அறிவுசார் வினாக்கள். திறந்தநிலை வினாக்கள் வழங்கப்பட்டுள்ளன.

உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலுள்ள உயர்த்தொழில்நுட்ப ஆய்வகத்தின் வாயிலாக மாணவர்களுக்கு offline மூலமாக மின்னுருவாக்கம் செய்யப்பட்ட செயல்பாட்டுக் கட்டகத்தினை மாணவர்கள் செய்யவேண்டும். மாணவர்கள் இணைப்பு 2இல் கொடுக்கப்பட்டுள்ள கால அட்டவணையின் படியே அனைத்து செயல்பாடுகள் செய்ய வேண்டும். இப்பணிகளை மேற்கொள்ள அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இயக்குநர்,

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் தமே

22.8.2023

இணைப்பு:

பயிற்சி நிறுவனம்

மாநிலத் திட்ட இயக்குநர், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி

1. கடமைகளும் மற்றும் பொறுப்புகளும் சார்ந்த விவரம்

2. கால அட்டவணை

பெறுநர்

அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் பள்ளிகளில்

இணைப்பு - 1

மனநலம் மற்றும் வாழ்வியல் திறன் தலைமையாசிரியர் பயிற்சியை மற்றும் நடைமுறைப்படுத்தவுள்ள அலுவலர்கள்,

ஆசிரியர்களுக்கான கடமைகளும் பொறுப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

1. ஆசிரியர்

ஒவ்வொரு மாதத்தின் 4-வது வாரத்தில் மாணவர்கள் ஆசிரியர் செயல்பாடுகளை பற்றி முன்கூட்டியே கேட்டு மாதிரி வினாக்களை கற்க போகும் கையோட்டில் மாணவர்களுடன் கொடுக்கப்பட்டுயுள்ள மாதிரி வகுப்பறையில் கலந்துரையாடி, அவர்கள் கற்க போகும் செயல்பாடுகளை பற்றி ஆயத்தப்படுத்துதல் வேண்டும்

* மாதத்தில் நான்காவது கால வாரத்தில் அட்டவணைப்படி ஆசிரியர் மாணவர்களைச் செயல்பாடுகளை செய்ய உயர் தொழில்நுட்ப ஆய்வகத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

ஒவ்வொரு செயல்பாடும் மாணவர்கள் செய்து முடிக்க 20 நிமிடங்கள் தேவைப்படும். பள்ளியில் உள்ள உயர்த்தொழில்நுட்ப ஆய்வகங்களில் உள்ள கணினி எண்ணிக்கையின் அடிப்படையில் மாணவர்களை அழைத்து செல்ல அட்டவணையினை ஏதுவாக தலைமையாசிரியரால் வகுக்கப்பட்ட பின்பற்றுதல் வேண்டும்.

* மாணவர்கள் தங்கள் உள்நுழைவு ஐடி (User ID) மற்றும் கடவுச்சொற்களுடன் (Password) இணைய முகப்பை அணுக உதவுதல்.

மனநலம் மற்றும் வாழ்வியல் திறன் சார்ந்த பயிற்சி பற்றிய முழு தகவல்களும் ஆசிரியர் கையேட்டில் கொடுக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்க் கையேடு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இணையத்தளத்தில்: https://tnschools.gov.in/scert/?lang=ta பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

கற்றலின்போது தவறு செய்வது மாணவர்களின் இயல்பு என்பதை உணரச் செய்து, ஆசிரியர் தேவைப்படும் இடங்களில் மாணவர்களுக்கு உதவ வேண்டும். * அவர்களின் சமூக மனவெழுச்சி நலனை மேம்படுத்தவும், நேர்மறை எண்ணங்களை உருவாக்கிடவும், மகிழ்ச்சியாகக் கற்றலில் ஈடுபடுவதற்கு மாணவர்கள் செயல்பாடுகளை கற்க பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டும்.

2. உயர் தொழில்நுட்ப ஆய்வக பொறுப்பாளர்

ஒவ்வொரு பள்ளியிலும் உள்ள உயர்தொழில்நுட்ப ஆய்வக பொறுப்பாளர் பள்ளியில் உள்ள ஆய்வகத்தில் உள்ள கணினி, இணைய வசதி, ஹெட்போன் போன்றவை மாணவர்கள் எளிதாக செய்யத் தக்க வகையில் வைத்திருக்க வேண்டும்.

* ஆய்வக பொறுப்பாளர் மாணவர்கள் மாணவர்கள் செயல்பாடுகள்

செயல்பாடுகள் செய்யும் பொழுது தொழில்நுட்ப ரீதியாக சந்தேகங்கள் ஏற்பட்டால் மாணவர்களுக்கு உதவிட வேண்டும்.

3. தலைமை ஆசிரியர்

* அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மனநலம் மற்றும் வாழ்வியல் திறன் சார்ந்த செயல்பாடுகளை ஆகஸ்டு முதல் பிப்ரவரி மாதம் வரை குறிப்பிட்டுள்ள மாதங்களில் நான்காவது வாரம் நடத்திடல் வேண்டும். * கல்வித் தகவல் மேலாண்மைத் தொகுப்பமைப்பு இணையதளம் (EMIS) வழியாக பள்ளிகளில் உள்ள உயர்த்தொழில்நுட்ப ஆய்வகத்தில் உள்ள கணினி வாயிலாக இச்செயல்பாடுகள் மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தங்களது பள்ளியில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப ஆய்வகத்தினை தயாரித்துக் பயன்படுத்துவதற்கு கொள்ளவும்.

கால் உயர்தொழில்நுட்ப அட்டவணையை தாங்களே இந்த பொருண்மைச் சார்ந்து பயிற்சி பெற்ற பட்டதாரி மற்றும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு செயல்பாடுகளை கற்பதற்கு துணை புரிந்திட வேண்டும். எந்தெந்த பாடவேளைகளில் மாணவர்கள் செயல்பாடுகளை மேற்கொள்கின்றனரோ அந்தப் பாடவேளைக்கான ஆசிரியர்கள் மாணவர்களுக்குத் துணை புரிதல் வேண்டும்.

· உயர்த்தொழில்நுட்ப ஆய்வக பொறுப்பாளரைக் கொண்டு பள்ளியில் உள்ள உயர் தொழில் நுட்ப ஆய்வகத்தில் உள்ள கணினி, இணைய வசதி, ஹெட்போன் போன்றவை மாணவர்கள் செயல்பாடுகளை எளிதாக செய்யத் தக்க வகையில் வைத்திருக்குமாறு அறிவுறுத்த வேண்டும். இந்த பொருண்மை சார்ந்து பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களும் ஒவ்வொரு மாதத்தின் வாரத்தில் மாணவர்கள் கற்க போகும் செயல்பாடுகளை பற்றி முன்கூட்டியே 4-வது

மாணவர்களுடன் வகுப்பறையில் கலந்துரையாடி, அவர்கள் கற்க போகும் செயல்பாடுகளை பற்றி ஆயத்தப்படுத்துதல் பற்றி ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

* மாதத்தின் நான்காவது வாரத்தில் மாணவர்கள் செயல்பாடுகளை முடித்த பின்னர் அடுத்த மாதத்தின் முதல் வாரத்தில் முதன்மைக் கல்வி அலுவலர் மாணவர்கள் செயல்பாடுகளில் பங்கேற்றதன் வாயிலாக வெளிப்படுத்திய திறன்களின் அடிப்படையில் ஆலோசனை தேவைப்படுவோர், தீவிர உரிய வல்லுநர்களைக் ஆலோசனை தேவைப்படும் மாணவர்களுக்கு கொண்டு ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்குதல் வேண்டும். 4. மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) * முதன்மைக் கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகளை கல்வி மேற்கொள்ளுதல் கல்வி அலுவலர்கள் மாவட்ட அளவில் மாவட்டக் வேண்டும். ஒவ்வொரு மாதமும் மாணவர்கள் உயர்தொழில்நுட்ப ஆய்வகத்தில் முதன்மைக் மேற்கொண்ட செயல்பாடுகள் சார்ந்த தரவுகளை கல்வி அலுவலரிடமிருந்து பெற்று, அடுத்த மாதம் முதல் மூன்று வாரங்களில் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய வழிகாட்டுதல்கள், ஆலோசனைகள், அறிவுரைகள் ஆகியவற்றை வழங்குவதற்கு தலைமையாசிரியர்களுக்கு உறுதுணை புரிதல் வேண்டும். மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் விவரங்கள் முதன்மைக் கல்வி அலுவலருக்குத் தெரிவிப்பதுடன் மாதாந்திர ஆய்வுக் கூட்டத்தில் சமர்ப்பித்தல் வேண்டும்.

5. முதன்மைக் கல்வி அலுவலர்

அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள தலைமை மேற்கொள்ள அறிவுறுத்தி ஆசிரியர்களுக்கு பணிகளை கீழ்க்கண்ட நடைமுறைப்படுத்த வேண்டும்.

கல்வித் தகவல் மேலாண்மைத் * அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மனநலம் மற்றும் வாழ்வியல் திறன் சார்ந்த செயல்பாடுகள்

தொகுப்பமைப்பு இணையதளம் (EMIS) வழியாக பள்ளிகளில் உள்ள உயர்த்தொழில் நுட்ப ஆய்வகத்தில் உள்ள கணினி வாயிலாக இணைப்பில் உள்ள அட்டவணையின்படி ஆகஸ்ட் 2023 முதல் பிப்ரவரி 2024 செயல்பாடுகளை செய்து குறிப்பிட்டுள்ள தேதிகளில் மாணவர்கள் கால் வரை முடித்திட ஏதுவாக தலைமையாசிரியர்கள் தங்களது பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் வகுப்புகளுக்கேற்ப அட்டவணையினை தயார் செய்திட அறிவுறுத்தல் வேண்டும்.

கால * ஒவ்வொரு பள்ளியிலும் உள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகத்திற்கான பொறுப்பு ஆசிரியர்களைக் கொண்டு பள்ளியில் உள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகத்தில் உள்ள கணினி, இணைய வசதி, ஹெட்போன் போன்றவை மாணவர்கள் எளிதாக பயன்படுத்தத்தக்க வகையில் ஆயத்தமாக வைத்திருக்கத் தக்க வகையில் தலைமையாசிரியர்களுக்குத் தெரிவித்தல் வேண்டும்.

* ஒவ்வொரு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மனநலம் மற்றும் வாழ்வியல் திறன் சார்ந்த பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களும் ஒவ்வொரு மாதத்தின் 4-வது வாரத்தில் மாணவர்கள் கற்கபோகும் செயல்பாடுகளை பற்றி முன்கூட்டியே மாணவர்களுடன் கலந்துரையாடி, அவர்கள் கற்க போகும் செயல்பாடுகளை பற்றி ஆயத்தப்படுத்துதல் வேண்டும்.

ஒவ்வொரு மாதமும் 4-வது வாரத்தில் மாணவர்கள் செயல்பாடுகளை செய்து முடித்த பின்னர் EMIS வழியாக தரவுகளைப் பெற்று அதன் அடிப்படையில் பள்ளி வாரியாக ஆலோசனைகள் தேவைப்படும் மாணவர்களுக்கு உரிய நிபுணர்கள் அல்லது வல்லுனர்களைக் கொண்டு வழிகாட்டுதல் மற்றும் அறிவுரை பகர்தல் வழங்க ஏற்பாடு செய்தல் வேண்டும்.

ஒவ்வொரு மாதத்தின் நான்காவது வாரத்தில் பள்ளிப் பார்வை மற்றும் ஆய்வு செய்யும் போது உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களை பார்வையிட்டு மாணவர்கள் செயல்பாடுகளை செய்வதை உறுதிப்படுத்துதல் வேண்டும். மாதத்தின் நான்காவது வாரத்தில் மாணவர்கள் செயல்பாடுகளை முடித்த பின்னர் அடுத்த மாதத்தின் முதல் வாரத்தில் EMIS தளத்திலிருந்து தரவுகளை தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள உள்நுழைவுச் சொல் (User ID) மற்றும் கடவுச்சொற்களுடன் (Password) இணைய முகப்பை அணுகி மாணவர்களின் மதிப்பீடுகளின் தரவுகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும். > EMIS லிருந்து பெற்ற தரவுகளின் அடிப்படையில் ஆலோசனை தேவைபடும் இடம் பெற்றுள்ள மாணவர்கள் பயிலும் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்து உரிய வல்லுநர்களின் துணையுடன் வழிகாட்டுதல், ஆலோசனை வழங்குதல் மற்றும் அறிவுரை பகர்தல் ஆகியவற்றை மேற்கொள்ள அறிவுறுத்தல் வேண்டும். * அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு மின்னுருவாக்கம் செய்யப்பட்ட செயல்பாட்டுக் கட்டகத்தினை மூலமாக வகையில் மேற்கொள்ளத்தக்க offline பதிவிறக்கம் செய்து அப்பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு மாவட்ட EMIS மூலம் வழங்குதல் வேண்டும்.

குழுவினர் Dash Board Details EMIS தளத்திலிருந்து பெறப்பட்ட தரவுகளில் பங்குபெற்ற மாணவர்களின் செயல்திறனானது அவையாவன

1. செயல்திறன் மிக்கவர்

2. திறன்மிக்கவர்

3. சராசரி திறன் பெற்றவர் நிலைகளில்

4. ஆலோசனை தேவைப்படுபவர் வகைப்படுத்தப்பட்டிருக்கும்.

5. தொடர் ஆலோசனை தேவைப்படுபவர் என்பனவாகும்.

ஒவ்வொரு செயல்பாடுகளும் முடிவுற்ற பின்னர் மாணவர்களை மதிப்பீடு செய்வதற்கு அவர்கள் வினாக்களுக்கு தெரிவு செய்த விடைகளின் அடிப்படையில் மேலே குறிப்பிட்டுள்ள 5 நிலைகளுக்குள் உள்ளடக்கப்படுவார்கள்.

இவற்றில் 4 மற்றும் 5 நிலைகளில் உள்ளடக்கிய மாணவர்களுக்கு அவர்கள் கற்றுக்கொண்ட செயல்பாடுகளில் குறிப்பிட்டுள்ள வாழ்வியல் திறன் சார்ந்து கூடுதல் ஊக்கம் பெறத்தக்க வகையில் தகுந்த வல்லுநர்களைக் கொண்டு ஆலோசனை வழங்குதல், அறிவுரை பகர்தல் மற்றும் வழிகாட்டுதல் போன்றவற்றை மேற்கொள்ள உரிய தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். CLICK HERE TO DOWNLOAD SPD & SCERT Co-Proceedings PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.