WhastsApp Groupsல் கருத்துகளை பதிவிடுவது விதிமீறல் ஆகாது: மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பு - PDF - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, August 15, 2023

WhastsApp Groupsல் கருத்துகளை பதிவிடுவது விதிமீறல் ஆகாது: மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பு - PDF



வாட்ஸ்ஆப் குழுவில் கருத்துகளை பதிவிடுவது விதிமீறல் ஆகாது: மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

CLICK HERE TO DOWNLOAD மதுரை உயர்நீதிமன்ற தீர்ப்பு - PDF

வாட்ஸ்ஆப் குழுவில் கருத்துக் களை பதிவிடுவது விதி மீறல் ஆகாது என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தீர்ப்பளித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுக நேரி தமிழ்நாடு கிராம வங்கி கிளை யில் பணியாற்றி வருபவர் லெட்சுமி நாராயணன், இவர், வங்கி நிர்வாகம் மற்றும் நிர்வாக முடிவை விமர்சித்து வாட்ஸ்ஆப்பில் பதிவு செய்ததாக கூறி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, தடை உத்தரவை பெற்றார். இதுகுறித்து அவருக்கு குற்றக்குறிப்பாணை (மெமோ) வழங்கப்பட்டது. அதை ரத்து செய்யக் கோரி லெட்சுமி நாராயணன், மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது?

தகவல் தொடர்பில் வாட்ஸ்ஆப் முக்கியமானது. மனுதாரர் தனிப் பட்ட வாட்ஸ்ஆப் குழுவில் வங்கி நிர்வாகம் தொடர்பாக சில கருத்துகளை பதிவிட்டு உள்ளார். அதை அவர் ஒப்புக்கொண்டு, மன்னிப்பும் கோரி யுள்ளார். தனிப்பட்ட வாட்ஸ்ஆப் குழுவில் கருத்துக்களை பதிவிடுவது வங்கி நிர்வாகத்தின் நடத்தை விதி களை மீறியதாக ஆகாது.
பணியாளர்கள் தங்கள் வீடுகளில் தனிப்பட்ட முறையில் அரட்டை அடித்துக் கொண்டிருப்பது நிர்வாக கட்டுப்பாடுகளை மீறல் ஆகாது. தற்போதைய உலகம் டிஜிட்டல் தொழில்நுட்பத்தால் இணைக்கப்பட்டு உள்ளது. மனுதாரர் தனது கருத்தை தனிப்பட்ட வாட்ஸ்ஆப் குழுவில்தான் பகிர்ந்து உள்ளார். இதனால் வங்கி யின் நலன் பாதிக்கப்பட்டது என்ற முடி வுக்கு நிர்வாகத்தினர் எப்படி வந்தார் கள்? என்று தெரியவில்லை. எனவே, மனுதாரருக்கு வழங்கிய மெமோ ரத்து.

இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

CLICK HERE TO DOWNLOAD மதுரை உயர்நீதிமன்ற தீர்ப்பு - PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.