MBBS,BDS கலந்தாய்வு - இடஒதுக்கீடு முடிவுகள் நாளை வெளியாகிறது - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, August 4, 2023

MBBS,BDS கலந்தாய்வு - இடஒதுக்கீடு முடிவுகள் நாளை வெளியாகிறது

எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு - இடஒதுக்கீடு முடிவுகள் நாளை வெளியாகிறது

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு ஆன்லைனில் நடந்த கலந்தாய்வில் இடஒதுக்கிடு பெற்றவர்களின் விவரங்கள் இணையதளத்தில் நாளை வெளியிடப்படுகிறது.

அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளின் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு 2023-24-ம்கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு ஜூலை 25-ம் தேதி முதல் சுகாதாரத்துறை இணையதளங் களில் நடைபெற்று வருகிறது. பதிவு செய்து, கட்டணம் செலுத்தி, இடங்களை தேர்வு செய்வது கடந்த3-ம் தேதியுடன் நிறைவடைந்தது.


தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் இடங்கள் ஒதுக்கீடுசெய்வது இன்று நிறைவடையஉள்ளது. ஆகஸ்ட் 6-ம் தேதி(நாளை) இடஒதுக்கீடு செய்யப்பட்ட விவரங்கள் இணையதளங்களில் வெளியிடப்படும். ஆகஸ்ட் 7-ம் தேதி முதல் 11-ம் தேதி மாலை 5 மணி வரை இட ஒதுக்கீட்டு ஆணையை இணையதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ஆகஸ்ட் 11-ம் தேதி மாலை 5 மணிக்குள் இடஒதுக்கீடு பெற்ற கல்லூரிகளில் சேர வேண்டும் என்று மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்தின் மருத்துவக் கல்வி மாணவர் தேர்வுக்குழு செயலாளர் ஆர்.முத்துச் செல்வன் தெரிவித்தார்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.