கல்வியியல் கல்லூரி படிப்புகளில் சேர வழிகாட்டு நெறிமுறைகள்: தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை வெளியிட்டது - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, August 16, 2023

கல்வியியல் கல்லூரி படிப்புகளில் சேர வழிகாட்டு நெறிமுறைகள்: தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை வெளியிட்டது

கல்வியியல் கல்லூரி படிப்புகளில் சேர வழிகாட்டு நெறிமுறைகள்: தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை வெளியிட்டது

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்துடன் இணைப்பு அந்தஸ்து பெற்றுள்ள கல்வியியல் கல்லூரிகளில் உள்ள படிப்புகளில் சேருவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பல்கலை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்துடன் இணைப்பு அந்தஸ்து பெற்றுள்ள கல்வியியல் கல்லூரிகளில் பி.எஸ்சி. பி.எட், பி.ஏ. பி.எட் படிப்புகளில் 2023-24ம் கல்வியாண்டில் சேருவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, பி.எஸ்சி. பி.எட், பி.ஏ. பி.எட் படிப்புகளுக்கு ஒரு செமஸ்டருக்கு 125 வேலை நாட்கள் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்று தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்.சி.டி.இ.) விதி இருக்கிறது.


இந்த விதிமுறைப்படி 125 வேலை நாட்கள் பின்பற்றப்படும்.

இந்த படிப்புகளில் சேரும் மாணவர்களிடம் அவர்கள் சார்ந்த அனைத்து விவரங்களையும் சரியாக பூர்த்தி செய்து, அவர்களின் கையொப்பம் பெற்று பதிவேற்றம் செய்ய வேண்டும். மாணவர்கள் பூர்த்தி செய்த தகுதி விண்ணப்பப் படிவத்தை, அந்தந்த கல்லூரிகள் அவர்களுக்கான ரகசிய குறியீட்டை பயன்படுத்தி, www.tnteu.ac.in என்ற இணையதளத்தில் வருகிற 25ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்யவேண்டும் என்பது உள்பட பல்வேறு வழிமுறைகளை சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு பல்கலைக்கழகம் அனுப்பியுள்ளது.

இதுதவிர மாணவர் சேர்க்கைக்கான தகுதி கட்டணத்தையும் பல்கலைக்கழகம் அறிவித்திருக்கிறது.

அதன்படி, பதிவு கட்டணம், நூலகம், தகுதி கட்டணம் உள்பட ரூ.635 கட்டணமாக நிர்ணயித்திருக்கின்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.