அரசுப் பள்ளிகளில் முன்னாள் மாணவர்களை(ALUMNI) இணைக்க கால அவகாசம் நீட்டிப்பு - SPD Proceeding - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, August 5, 2023

அரசுப் பள்ளிகளில் முன்னாள் மாணவர்களை(ALUMNI) இணைக்க கால அவகாசம் நீட்டிப்பு - SPD Proceeding

முன்னாள் மாணவர்களை பள்ளியுடன் ஒருங்கிணைத்தல் EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய 31.08.2023 வரை கால அவகாசம் நீட்டிப்பு.

அரசுப் பள்ளிகளில் முன்னாள் மாணவர்களை(ALUMNI) இணைக்க கால அவகாசம் நீட்டிப்பு...

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - அரசுப் பள்ளி முன்னாள் மாணவர்களை பள்ளியுடன் ஒருங்கிணைத்தல் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய கால அவகாசம் நீட்டித்தல் - சார்பு

பார்வையில் காணும் இவ்வலுவலக செயல்முறைகளில், அரசுப் பள்ளியின் நலன் மீது பொறுப்புணர்வு கொண்ட 25 முன்னாள் மாணவர்களை கண்டறிந்து ஜூலை 20ஆம் தேதிக்குள் அவர்களின் தகவல்களை tnschoolsgov.in என்ற இணையதள பக்கத்தில் முன்னாள் மாணவர்களுக்கான படிவத்தில் சார்ந்த பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் பதிவு செய்திட அறிவுறுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, மாவட்ட அலுவலர்கள் மற்றும் தலைமை ஆசிரிசயர்களால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகவின் முயற்சியால் நாளது சீததி வரை 141287 முன்னாள் மாணவர்கள் அரசுப் பள்ளியுடன் இணைந்து பயணிக்க முன்வந்துள்ளார்கள். அதில் 40% பெண்களும், திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள் பங்கேற்க முன்வந்துள்ளார்கள் என்பது மிகுந்த நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. இம்முயற்சியில் 78% மேல்நிலைப் பள்ளிகளிலும் 46% உயர்நிலைப் பள்ளிகளிலும் 40% நடுநிலைப் பள்ளிகளிலும் 28% தொடக்கப் பள்ளிகளிலும் பதிவு செய்துள்ளார்கள். அதிக அளவில் முன்னாள் மாணவர்களை பள்ளியுடன் ஒருங்கிணைக்க ஏதுவாக பத்தி 1 இல் குறிப்பிட்டுள்ள இணையதள பக்கத்தில் பதிவேற்றம் செய்வதற்குஆகஸ்ட் 31ஆம் தேதி வரை கால நீட்டிப்பு அளிக்கப்படுகிறது.

1. குறைந்தபட்சம் 25 முன்னாள் மாணவர்கள் கொண்ட முன்னாள் மாணவர்கள் மன்றம் இருப்பதை அனைத்து அரசுப் பள்ளிகளும் உறுதி செய்ய வேண்டும். மேலும், அதிகபட்சமாக விருப்பமுள்ar அனைத்து முன்னாள் மாணவர்களையும் பள்ளியுடன் ஒருங்கிணைக்கலாம். 2. சமீபமாக தொடங்கப்பட்ட அல்லது தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளாக இருப்பின் குறிப்பாக தொடக்க. நடுநிலை, உயர்நிலைப் பள்ளிகளில் பள்ளிப் படிப்பு முடிக்காத முன்னாள் மாணவர்கள் இருக்க வாய்ப்புள்ளதனால், அப்பள்ளிகள் மட்டும் மாணவர்கள் பள்ளிப் படிப்பு முடித்த பின்னர் முன்னாள் மாணவர்கள் மன்றம் உருவாக்க கால அவகாசம் அளிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.