முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்திற்கு முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் பெயரை சூட்ட - தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு வேண்டுகோள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, August 24, 2023

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்திற்கு முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் பெயரை சூட்ட - தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு வேண்டுகோள்



முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்திற்கு முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் பெயரை சூட்ட - தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு வேண்டுகோள்

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்திற்கு முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் பெயரை சூட்ட - தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு -சார்பில் - மாண்புமிகு முதலமைச்சர் அவர்களக்கு - நிறுவனத் தலைவர் - சா.அருணன் - வேண்டுகோள் ~~~~

தமிழ்நாடு முழுவதும் உள்ள 31.000 பள்ளிகளில் 17 லட்சம் மாணவ மாணவிகள் பயன்பெறும் விதமாக தமிழ்நாடு முழுவதும் விரிவு படுத்தி தனது திருக்கரங்களால் இன்று தொடங்கிவைத்துள்ளார், அதாவது அரசு பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் சூழ்நிலை காரணமாக காலை உணவுக் கூட அளிக்காமல் பள்ளிக்கு அனுப்புகிறார்களே என அறிந்து உன்னத உணர்வோடு முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை தொடங்கிவைத்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் , www.kalviseithiofficial.com அதே சூழ்நிலையில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்திற்கு முன்னாள் முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஐயா பெயரை சூட்டினால் பொருத்தமாக இருக்கும் மாணவர்களின் வளர்ச்சிக்காக பல திட்டங்களை வகுத்து நிறைவேற்றி அவர்களின் வாழ்க்கையை மேம்பாடு அடைய செய்தவர் முத்தமிழ் கலைஞர் ஐயா அவர்கள் ஆதலால் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காலை உணவு திட்டத்திற்கு முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் பெயரை சூட்ட வேண்டுமாய் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு கேட்டுக் கொள்கிறது

மேலும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் விரிவு படுத்த வேண்டும் , ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவ மாணவிகள் காலை 7.30 மணிக்கே பள்ளிக்கு வரவேண்டும் என்ற சூழ்நிலை ஏற்படும் இதனால் மாணவர்ஙள் மாலையில் சோர்வடைய வாய்ப்புள்ளது ஏற்கனவே தனியார் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை மாலை 3.00 மணிவரையே செயல்படுகிறது www.kalviseithiofficial.com அதேபோன்று அரசு பள்ளிகளிலும்1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்புகள் மாலை 3.00 மணி வரை செயல்படும் விதமாக உத்தரவு பிறப்பிக்க மாண்புமிகு முதலமைச்சர் அவர்களையும் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களையும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன் சா.அருணன்

நிறுவனத் தலைவர்

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.