பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சாதி, இன உணர்வுகள் காரணமாக உருவாகும் வன்முறைகளைத் தவிர்க்கவும், நல்லிணக்கம் ஏற்படுத்தவும். வழிமுறைகள் வகுக்கவும் ஓய்வு பெற்ற நீதியரசர் திரு. கே.சந்துரு அவர்கள் தலைமையில் ஒரு நபர் குழுஅமைத்தல் - அரசாணை (நிலை) எண்:152 நாள். 2308.2023 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, August 24, 2023

பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சாதி, இன உணர்வுகள் காரணமாக உருவாகும் வன்முறைகளைத் தவிர்க்கவும், நல்லிணக்கம் ஏற்படுத்தவும். வழிமுறைகள் வகுக்கவும் ஓய்வு பெற்ற நீதியரசர் திரு. கே.சந்துரு அவர்கள் தலைமையில் ஒரு நபர் குழுஅமைத்தல் - அரசாணை (நிலை) எண்:152 நாள். 2308.2023

Avoid violence arising out of caste and ethnic sentiments and create harmony among school and college students. Retired Justice Shri. Establishment of One Person Committee headed by K. Chanduru - Ordinance (Status) No:152 Date. 2308.2023

பள்ளிக் கல்வி பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சாதி, இன உணர்வுகள் காரணமாக உருவாகும் வன்முறைகளைத் தவிர்க்கவும், நல்லிணக்கம் ஏற்படுத்தவும். வழிமுறைகள் வகுக்கவும் ஓய்வு பெற்ற நீதியரசர் திரு. கே.சந்துரு அவர்கள் தலைமையில் ஒரு நபர் குழுஅமைத்தல் ஆணை வெளியிடப்படுகிறது.

பள்ளிக் கல்வித் (பொது 1(2)) துறை

அரசாணை (நிலை) எண்:152

நாள். 2308.2023

திருவள்ளுவர் ஆண்டு 2053

சோபகிருது வருடம் ஆவணி-தி

படிக்கப்பட்டவை:-

1. மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் செய்தி வெளியீடு எண்: 1637. நாள்:12.08.2023,

2. அரசாணை(நிலை) எண்.144, பள்ளிக் கல்வித் (பொது|2)) துறை, நாள்:21.08.2023 ஆணை:-

மேலே முதலாவதாக படிக்கப்பட்ட செய்தி வெளியீட்டில் கீழ்க்கண்ட அறிவிப்பினை

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வெளியிட்டுள்ளார் :- “இளைய சமுதாயத்தினரிடையே சாதி, இன உணர்வு பரவியிருப்பது எதிர்கால தமிழ்நாட்டின் நலனுக்கு உகந்ததல்ல.

இது உடனடியாக சரி செய்யப்பட வேண்டிய ஒரு முக்கியமானப் பிரச்சனை என்பதால், இதில் அரசு எந்த வகையான நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது குறித்தும், பள்ளி. கல்லூரி மாணவர்களிடையே சாதி, இனப் பிரிவினைகள் இல்லாத ஒரு சூழ்நிலையை உருவாக்கிட மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், அரசுக்கு ஆலோசனைகளை வழங்கிட ஓய்வு பெற்ற நீதியரசர் திரு. கே. சந்துரு அவர்கள் தலைமையில் ஒரு நபர் குழு அமைத்திட உத்தரவிட்டுள்ளேன்.

" இந்த குழு மேற்படி பொருள் தொடர்பாக, கல்வியாளர்கள், மாணவர்கள், சமூக சிந்தனையாளர்கள், பத்திரிக்கைத் துறையினர் என பல்வேறு தரப்பினரிடமிருந்தும் கருத்துக்களைப் பெற்று அதனடிப்படையில் அரசுக்கு விரைவில் அறிக்கை சமர்ப்பித்திடும்.” 2. மேற்கண்ட மாண்புமிகு முதலமைச்சரின் அறிவிப்பினை செயல்படுத்தும் பொருட்டு, பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சாதி இன உணர்வுகள் காரணமாக உருவாகும் வன்முறைகளைத் தவிர்க்கவும், நல்லிணக்கம் ஏற்படுத்தவும், வழிமுறைகளை வகுக்கவும் மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதியரசர் திரு.கே.சந்துரு அவர்கள் தலைமையில் ஒரு நபர் குழு அமைத்து அரசு ஆணையிடுகிறது.

3. இக்குழு தனது அறிக்கையினை அரசுக்கு 6 மாதங்களுக்குள் அளித்திட வேண்டும். மேற்கண்ட ஒரு நபர் குழு தற்போது இயங்கிவரும் 447, கச்சேரி சாலை, மயிலாப்பூர் சென்னை4ல் உள்ள வாடகைக் கட்டடத்தில் தொடர்ந்து செயல்படும்.

4. மாண்பமை நீதியரசர் திரு. கே. சந்துரு அவர்கள் தலைமையில் ஒரு நபர் குழுவிற்கு தேவையான அனைத்து உதவிகளும், வசதிகளும் ஏற்படுத்தி தா பள்ளி இல் இயக்குநருக்கு உத்தரவிடப்படுகிறது. பள்ளிக்கல்வி இயக்குநர் இக்குழுவிற்கு தேவையான அலுவலக உதவிகளுக்காக Liason officer ஒருவரை நியமிக்கவும் ஆணையிடப்படுகிறது. மேலும் பள்ளிக் கல்வி இயக்குநர் இக்குழுவிற்கு தேவையான செலவினங்கள் குறித்து அரசுக்கு கருத்துரு அனுப்புமாறும் அறிவுறுத்தப்படுகிறார்.

5. மேலே பத்தி 2ல் அமைக்கப்பட்ட ஒரு நபர் குழுவிற்கு கீழ்க்கண்டவாறு விதிமுறைகள் (Terms of References) வகுக்கப்படுகின்றன:-

அ) பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சாதி, இனப் பிரிவினைகள் இல்லாத ஒரு சூழ்நிலையை உருவாக்கிட மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, ஆய்வு செய்திட வேண்டும்.

ஆக்கபூர்வமான முறையில் சாதி, இன பேதமற்ற சமூகத்தை உருவாக்க ஆசிரியர்கள். மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுடன் இணைந்து அனைவரும் ஒற்றுமையாக வாழ்வதற்கு தேவையான வழிகாட்டுதல்கள் மற்றும் ஆலோசனைகள், உந்துதல்கள் (Motivation) தொடர்பான அறிக்கைகள்அளித்திட வேண்டும். மாணவர்கள் தங்களது குறைகளை தெரிவிப்பதற்கு ஏதுவான அமைப்பை (Grievance Redressal)உருவாக்குவதற்கான ஆலோசனைகளை அரசுக்கு வழங்க வேண்டும்.

இந்தக் குழு மேற்படி பொருள் தொடர்பாக, கல்வியாளர்கள், மாணவர்கள், சமூக FF) சிந்தனையாளர்கள், பத்திரிக்கைத் துறையினர் என பல்வேறு தரப்பினரிடமிருந்தும் கருத்துக்களை பெற்று அரசுக்கு அறிக்கை அளித்திட வேண்டும்.

இப்பொருள் தொடர்பான ஆழ்ந்த நோக்கமறிய. இக்குழு பல்வேறு நிறுவனங்களாகிய காவல்துறை அதிகாரிகள், குழந்தைகள் நல குழு, சிறார் நீதி வாரியம், சாதி அடிப்படையிலான வன்முறையில் ஈடுபட்டு தண்டனை பெற்ற சிறார்கள் ஆகியோருடன் உரையாடி, தெளிவான வழிகாட்டுதல் மற்றும் நெறிமுறைகள் அரசிற்கு அளிக்க வேண்டும்.

இது தொடர்பாக அரசால் பரிந்துரைக்கும் அல்லது குழு தேவை எனக் கருதும் இதர பொருண்மைகளையும் ஆய்வு செய்திட வேண்டும். 6. மேலே இரண்டாவதாக படிக்கப்பட்ட அரசாணைக்கு மாற்றாக இவ்வரசாணை வெளியிடப்படுகிறது. இதையும் படிக்க | பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சாதி, இன உணர்வுகள் காரணமாக உருவாகும் வன்முறைகளைத் தவிர்க்கவும், நல்லிணக்கம் ஏற்படுத்தவும்,வழிமுறைகள் வகுக்கவும் ஓய்வு பெற்ற நீதியரசர் திரு.கே.சந்துரு அவர்கள் தலைமையில் ஒரு நபர் குழு அமைப்பு - மாண்புமிகு முதலமைச்சர் உத்தரவு! செய்தி வெளியீடு எண் :1637 நாள்: 12.08.2023



CLICK HERE TO DOWNLOAD அரசாணை (நிலை) எண்:152 நாள். 23.08.2023 PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.