வரும் 9-ம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, August 7, 2023

வரும் 9-ம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர்



ஆடி கிருத்திகை திருவிழா இன்று தொடக்கம்: திருத்தணியில் முன்னேற்பாடுகள்; 9-ல் உள்ளூர் விடுமுறை

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில், முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாக விளங்குகிறது. இக்கோயிலில் ஆண்டு தோறும் ஆடிக் கிருத்திகை திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில், இந்தாண்டுக்கான ஆடிக்கிருத்திகை திருவிழா இன்று தொடங்குகிறது. வரும் 11-ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெற உள்ள இந்த திருவிழாவில், இன்று ஆடி அஸ்வினி திருவிழாவும் நாளை ஆடி பரணி திருவிழாவும் நடைபெற உள்ளன. தொடர்ந்து, விழாவின் முக்கிய திருவிழாவான ஆடிக்கிருத்திகை வரும் 9-ம் தேதி நடக்கிறது. அன்று இரவு தெப்பத் திருவிழாவும், 10-ம் தேதி 2-ம் நாள் தெப்பத் திருவிழாவும், 11-ம் தேதி 3-ம் நாள் தெப்பத் திருவிழாவும் நடைபெற உள்ளன. இத்திருவிழாவில், சுப்பிரமணிய சுவாமி சிறப்பு அலங்காரங்களில் பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளார்.

இந்துசமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, அரக்கோணம் எம்.பி. ஜெகத்ரட்சகன், அறநிலைய துறை சிறப்பு பணி அலுவலர் குமரகுருபரன், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

இந்த விழாவில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்தும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, பால் காவடி உள்ளிட்ட பல்வேறு வகையான காவடிகளை சுமந்தும், தலைமுடி காணிக்கையை செலுத்தியும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துவர்.

இதற்காக கோயில் நிர்வாகம் மற்றும் திருத்தணி நகராட்சி நிர்வாகம் உள்ளிட்டவை சார்பில் பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆடிக்கிருத்திகை திருவிழாவை முன்னிட்டு வரும் 9-ம் தேதி திருவள்ளூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.