கேந்திரிய வித்யாலயா பள்ளியில் தமிழ் கற்பிக்க புது ஏற்பாடு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, July 9, 2023

கேந்திரிய வித்யாலயா பள்ளியில் தமிழ் கற்பிக்க புது ஏற்பாடு



கேந்திரிய வித்யாலயா பள்ளியில் தமிழ் கற்பிக்க புது ஏற்பாடு New arrangement for teaching Tamil in Kendriya Vidyalaya School தமிழகம் முழுதும், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், தமிழ் கற்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசின் தமிழ் கட்டாய மொழி சட்டத்தின்படி, ஒன்று முதல், 10ம் வகுப்பு வரை வரை, தமிழ் பாடத்தை கட்டாயமாக கற்பிக்க வேண்டும். தமிழக அரசு பள்ளிகளில் மட்டுமின்றி, சி.பி.எஸ்.இ., - ஐ.சி.எஸ்.இ., - கேம்பிரிட்ஜ் பாடத்திட்ட பள்ளிகளிலும், தமிழை கட்டாயமாக கற்பிக்க வேண்டும் என, பள்ளிகளுக்கு கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.

இந்நிலையில், மத்திய கல்வித் துறையின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா என்ற கே.வி., பள்ளிகளில், அனைத்து மாணவர்களுக்கும் தமிழ் பாடம் கற்பிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இதற்காக, தமிழக இணைய கல்வி கழகம் என்ற, 'தமிழ்நாடு விர்ச்சுவல் அகாடமி' வழியே, தமிழ் பாடங்களை ஆடியோ, வீடியோ வடிவில், கே.வி., மாணவர்களுக்கு கற்றுத்தர ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் உள்ள, 45 கே.வி., பள்ளிகளில், அடுத்த மாதம் முதல் தமிழ் கற்பித்தல் வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.

மேலும், தமிழக பள்ளிக் கல்வித் துறை மற்றும் தமிழ் வளர்ச்சித் துறையும், கே.வி., பள்ளிகளுக்கு தமிழ்ப் பாட புத்தகங்கள் வழங்குகின்றன. இந்த பள்ளிகளில், தமிழ் ஆசிரியர்களை தனியாக நியமிக்கவும், முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.