வகை - I நீரிழிவு நோயால் (Type - I Diabetes) பாதிக்கப்பட்டுள்ள பள்ளி மாணவர்கள் நலன் காக்கும் பொருட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் நாள்.12.07.2023 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, July 14, 2023

வகை - I நீரிழிவு நோயால் (Type - I Diabetes) பாதிக்கப்பட்டுள்ள பள்ளி மாணவர்கள் நலன் காக்கும் பொருட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் நாள்.12.07.2023

Proceedings of the Director of School Education regarding measures to be taken to protect the welfare of school students suffering from Type - I Diabetes (Type - I Diabetes) dated 12.07.2023 - வகை - I நீரிழிவு நோயால் (Type - I Diabetes) பாதிக்கப்பட்டுள்ள பள்ளி மாணவர்கள் நலன் காக்கும் பொருட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் நாள்.12.07.2023 தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-06

ந.க.எண்.34767/எம்/இ1/2023,

நாள்.12.07.2023

பொருள்: பள்ளிக் கல்வி - வளர்இளம் பருவ மாணவர்களிடம் காணப்படும் வகை-I நீரிழிவு பாதிப்பு - பாதிக்கப்பட்டுள்ள பள்ளி மாணவர்கள் நலன் காக்கும் பொருட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் - அறிவுரைகள் வழங்குதல் - சார்பு. பார்வை:

1. NCPCR-D.O.Lr.No-227850/NCPCr/CH(1)-2022-23.

Date.28.03.2023. 2. பள்ளிக் கல்வித் துறை செயலகக் கடிதம்

6T6br.4111/GL1(2)/2023-1, date.05.04.2023, 05.07.2023.

பன்னாட்டு டயாபெடிஸ் அமைப்பின் (IDF) அறிக்கையில் உலக அளவில் இந்தியாவில் அதிக அளவு குழந்தைகள் மற்றும் வளர்இளம் பருவத்தினர் வகை-1 நீரிழிவு குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதாக பார்வை (1)-இல் கண்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இத்தகைய குழந்தைகள் தங்கள் வாழ்நாள் முழுவதும் ஒவ்வொரு நாளும் இன்சுலின் மருந்தினை ஊசி வழியே செலுத்துதல், நாள்தோறும் இரத்த சர்க்கரை அளவைக் கண்காணித்தல் உள்ளிட்ட செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும் நிலையில், இத்தகைய வகை-1 நீரிழிவு குறைபாடுடைய மாணவர்கள் தங்களது பெரும்பாலான நேரத்தை பள்ளியில் செலவிடுவதைக் கருத்திற்கொண்டு அவர்களின் நலன் காக்கும் பொருட்டு, பள்ளி நிர்வாகத்திற்கு தகுந்த அறிவுரைகளை வழங்க பார்வையில் கண்டுள்ள கடிதங்களில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், பின்வரும் அறிவுரைகள் வழங்கப்படுகின்றன. வகை-1 நீரழிவினால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளைப் பொறுத்தவரையில் அவர்கள் தங்களது இரத்த சர்க்கரை அளவை சோதித்து அறிதல், இன்சுலின் எடுத்துக் கொள்ளுதல், வழக்கமான உணவு உண்ணும் நேரத்திற்கு இடைப்பட்ட நேரங்களில் சிற்றுண்டி எடுத்துக் கொள்ளுதல், மருத்துவர் பரிந்துரைப்படி நீரழிவு தன்பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் போன்றவை தேவைப்படலாம். எனவே, இத்தகைய மாணவர்கள் மேற்கண்டுள்ளவற்றை மேற்கொள்ள தேர்வு நேரம் மற்றும் பள்ளி நேரங்களில் வகுப்பாசிரியர்கள் அனுமதிக்க வேண்டும். மேலும், மருத்துவரின் பரிந்துரைப்படி, அவர்கள் விளையாட்டுப் போட்டிகளிலும் பங்கேற்க வாய்ப்பளிக்க வேண்டும்.

பள்ளி மற்றும் தேர்வு நேரங்களில், இத்தகைய பாதிப்புடைய மாணவர்கள் தங்களுடன் நீரிழிவு பாதிப்பிற்கான மருந்துகள், மாத்திரைகளை எடுத்துவர அனுமதிக்க வேண்டும். பழங்கள், சிற்றுண்டிகள், குடிநீர், உலர் பழங்கள் உள்ளிட்டவற்றையும் தங்களுடன் எடுத்து வர அனுமதிக்க வேண்டும்.

குளுக்கோ மீட்டர் போன்ற இரத்த சர்க்கரை அளவை சோதித்தறியும் உபகரணங்களை பாதிக்கப்பட்டுள்ள மாணவர்கள் தங்களுடன் எடுத்துவர அனுமதிக்க வேண்டும். தொடர் குளுக்கோஸ் கண்காணிப்பிற்கு (CGM-Continuous glucose monitoring, FGM- Flash glucose monitoring மற்றும் இன்சுலின் பம்பு) போன்றவற்றை இத்தகைய பாதிப்புடைய மாணவர்கள் தங்களது உடலில் பொருத்தி பயன்படுத்திவரின், அதனை தொடர்ந்து பள்ளி நேரம்/தேர்வு நேரங்களில் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். மேலும், திறன் அலைபேசியைப் (Smart Phone) பயன்படுத்தி அளவீடுகள் மேற்கொள்ளப்படின் தேர்வு நேரங்களின்போது, அலைபேசியினை தேர்வு அறை கண்காணிப்பாளரிடம் ஒப்படைத்து குளுக்கோஸ் குளுக்கோஸ் அளவினைக் கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேற்கண்டுள்ள அறிவுரைகளை. அனைத்து தலைமையாசிரியர்கள்/பள்ளி முதல்வர்களுக்கு சுற்றறிக்கையாக அனுப்பிடவும், பள்ளி நிர்வாகங்கள் தங்களிடம் பயிலும் வகை-1 நீரிழிவு பாதிப்புடைய மாணவர்களின் நலனைக் காக்கும்பொருட்டு அவர்களுக்கு தகுந்த வகுப்பறைசூழலை ஏற்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளுவதை உறுதி செய்து அறிக்கை சமர்ப்பித்திட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.