உலகம் முழுவதும் பள்ளி மாணவர்கள் ஸ்மார்ட் போன் பயன்படுத்த தடை. UNESCO புதிய அதிரடி - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, July 28, 2023

உலகம் முழுவதும் பள்ளி மாணவர்கள் ஸ்மார்ட் போன் பயன்படுத்த தடை. UNESCO புதிய அதிரடி



School students around the world are banned from using smart phones. UNESCO New Action - உலகம் முழுவதும் பள்ளி மாணவர்கள் ஸ்மார்ட் போன் பயன்படுத்த தடை. UNESCO புதிய அதிரடி

உலகம் முழுவதும் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் கொரோனா தொற்று காரணமாக பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து தற்போது மாணவர்கள் மத்தியில் அதிக அளவில் ஸ்மார்ட் போன் பயன்பாடு என்பது அதிகரித்து விட்டது. நாளுக்கு நாள் ஸ்மார்ட்போன்களின் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அதிகரித்து வரும் நிலையில் மாணவர்களின் கல்வித் திறன் மிகவும் குறைந்து கொண்டே வருவதாக UNESCO தெரிவித்துள்ளது. அதன்படி டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அனைத்து தரப்பட்ட மக்களுக்கும் ஒரே மாதிரியானதாக இல்லை என்றும் ஆன்லைன் வகுப்புகள் நடத்தும் போதும் கூட பல்வேறு மாணவர்கள் இணைய வசதி இல்லாமல் மிகவும் சிரமப்பட்டனர். www.kalviseithiofficial.com பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவினரை தவிர உலகம் முழுவதும் டிஜிட்டல் தொழில்நுட்பம் வளர்ந்து கொண்டே இருக்கிறது. இது மாணவர்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் மாணவர்களின் உணர்ச்சியையும் அதிக அளவில் பாதிக்கின்றது. எனவே பள்ளி மாணவர்கள் மத்தியில் ஸ்மார்ட் ஃபோன்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று யுனெஸ்கோ தற்போது வலியுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.