NMMS தேர்வு குறித்த பயிற்சி மற்றும் ஆலோசணைக்கூட்டம் - 8 ஆம் வகுப்பு கணிதம், அறிவியல், மற்றும் சமூக அறிவியல் கையாளும் ஆசிரியர்களில் எவரேனும் ஒரு பட்டதாரி ஆசிரியர் கலந்து கொள்ள தெரிவித்தல் சார்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, July 28, 2023

NMMS தேர்வு குறித்த பயிற்சி மற்றும் ஆலோசணைக்கூட்டம் - 8 ஆம் வகுப்பு கணிதம், அறிவியல், மற்றும் சமூக அறிவியல் கையாளும் ஆசிரியர்களில் எவரேனும் ஒரு பட்டதாரி ஆசிரியர் கலந்து கொள்ள தெரிவித்தல் சார்பு

தூத்துக்குடி, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் பிறப்பிப்பவர்- திருமதி.எல்.ரெஜினி, எம்.ஏ.எம்.எட்,எம்.பில்.,

நக.எண். /மா.ஒ.7/2023 நாள் .07.2023

பொருள்- தூத்துக்குடி மாவட்டம், - ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி 2023-24 ஆம் கல்வியாண்டிற்கான தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைக்கான தேர்வு (N.M.M.S) குறித்த பயிற்சி மற்றும் ஆலோசணைக்கூட்டம் - 8 ஆம் வகுப்பு கணிதம், அறிவியல், மற்றும் சமூக அறிவியல் கையாளும் ஆசிரியர்களில் எவரேனும் ஒரு பட்டதாரி ஆசிரியர் கலந்து கொள்ள தெரிவித்தல் சார்பு

தூத்துக்குடி மாவட்டம், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி. 2023-24 ஆம் கல்வியாண்டிற்கான தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைக்கான தேர்வில் (N.M.M.S ) நமது மாவட்ட மாணவர்கள் சிறப்பாக பங்களிப்பை அளிக்கும் வகையில் அவர்களுக்கு மாதிரி பயிற்சித் தேர்வுகள் வரும் ஆகஸ்ட் மாதம் முதல் நடைபெற உள்ளது. மேற்காண் தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்படுத்தும் பொருட்டு அனைத்து நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் 8 ஆம் வகுப்பு கணிதம், அறிவியல், மற்றும் சமூக அறிவியல் கையாளக்கூடிய ஆசிரியர்களுக்கு (பள்ளிக்கு எவரேனும் ஒரு பட்டதாரி ஆசிரியர்) வரும் 01.08.2023 ஆம் தேதி காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை துாத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வைத்து முதன்மைக்கல்வி அலுவலரின் தலைமையில் N.M.M.S தேர்வு பயிற்சியாளர் திரு.மோகன் அவர்களால் N.M.M.S தேர்வு குறித்த பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இக்கூட்டதிற்கு மேற்காண் ஆசிரியர்கள் (பள்ளிக்கு எவரேனும் ஒரு பட்டதாரி ஆசிரியர்) கலந்து கொள்ளும் பொருட்டு பணிவிடுவிப்பு செய்திட பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்த சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி மற்றும் இடைநிலை) மற்றும் சார்ந்த அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக் கல்வி அலுவலர் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, தூத்துக்குடி.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.