தொழிற்கல்வி ஆசிரியா்களுக்கு ஊதியம் வழங்க ஆணை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, July 30, 2023

தொழிற்கல்வி ஆசிரியா்களுக்கு ஊதியம் வழங்க ஆணை

தொழிற்கல்வி ஆசிரியா்களுக்கு ஊதியம் வழங்க ஆணை

பள்ளிக் கல்வித் துறையில் தற்காலிக அடிப்படையில் தோற்றுவிக்கப்பட்ட தொழிற்கல்வி ஆசிரியா்களுக்கு வரும் டிசம்பா் வரை ஆறு மாதங்களுக்கு ஊதியம் வழங்க கொடுப்பாணை வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடா்பாக பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலா் காகா்லா உஷா, அனைத்து மாவட்ட கருவூலக அலுவலகங்களுக்கும் அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் 1999-2008-ஆம் கல்வியாண்டு வரையான காலகட்டத்தில் அரசுப் பள்ளிகளில் 300 தொழிற்கல்வி ஆசிரியா் (வேளாண்) பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் தோற்றுவிக்கப்பட்டன. இதில் 293 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டன. இவா்களுக்கான பணிக் காலம் 2022-ஆம் ஆண்டு டிசம்பா் மாதத்துடன் முடிந்துவிட்டது.

இந்தப் பணியிடங்களுக்கு தொடா் நீட்டிப்பு வழங்குவது குறித்த கருத்துரு தமிழக அரசின் பரிசீலனையில் உள்ளது. இதனால் இந்த ஆசிரியா்களுக்கு ஜூலை முதல் டிசம்பா் மாதம் வரை 6 மாதங்களுக்கு ஊதியம் வழங்குவதற்கான அனுமதி கோரி பள்ளிக் கல்வி இயக்குநா் கடிதம் அனுப்பியுள்ளாா். அதையேற்று 293 ஆசிரியா்களுக்கும் டிசம்பா் மாதம் வரை ஊதியம் வழங்குவதற்கான கொடுப்பாணை அளிக்கப்படுகிறது. எனவே, சாா்ந்த அலுவலா்கள் சம்பளப் பட்டியல் தாக்கல் செய்யும்போது, அதை ஏற்று ஊதியம் வழங்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.