இன்று (ஜூலை 31) EMIS ENTRY& IT RETURN E-FILE இரண்டிற்கும் இறுதிக்கெடு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, July 30, 2023

இன்று (ஜூலை 31) EMIS ENTRY& IT RETURN E-FILE இரண்டிற்கும் இறுதிக்கெடு!

ஜூலை 31 இரண்டிற்கு இறுதிக்கெடு!

*1. IT RETURN E-FILE :*

இதுவரை IT RETURN செய்யாதவர்கள் (வரி கட்டினாலும், வரியே வராவிட்டாலும்) உடன் E-File செய்துவிடுங்கள். செய்யாதவர்களுக்கு 5,000 வரை அபராதம் விதிக்கப்படும். கடந்த ஆண்டுகளில் இது கண்டுகொள்ளப்படவில்லைதான் என்றாலும், வரும் காலங்களில் அவ்வாறு இருக்காது.

*2. EMIS ENTRY :*

பள்ளியிலுள்ள ஆசிரியர்களை Surplusல் இருந்து தக்கவைத்துக் கொள்ள & Need Postஐ உறுதி செய்துகொள்ளத் தேவையான மாணவர் எண்ணிக்கையை EMISல் முழுமையாக 31.07.2023-ற்குள் பதிவேற்றிவிடுங்கள். இந்தத் தேதிக்கு முன்னோ / பின்னோ நீங்கள் எத்தனை மாணவர்களை admission செய்து பள்ளி ஆவணங்களிலும், MRலும் எழுதி வைத்தாலும் அதனால் எந்தப்பயனுமில்லை. EMIS தளத்தில் உள்ள எண்ணிக்கையை வைத்து மட்டுமே 01.08 Particulars (Surplus / Need) உறுதி செய்யப்படும். அந்த எண்ணிக்கையும் இயக்குநரகத்தால் (ஆகஸ்ட் மாதத்தில் ஏதேனும் ஒரு தேதியின் அடிப்படையில்) வட்டடார / மாவட்டக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். அந்த எண்ணிக்கையை வைத்தே வட்டடார / மாவட்டக் கல்வி அலுவலர்கள் Surplus / Need Postஐ உறுதி செய்வர்.

Surplus Postஐப் பொறுத்தவரை 30:1 என்ற விகிதாச்சாரம் பின்பற்றப்படுகிறது.

Need Postஐப் பொறுத்தவரை 45:1 என்ற விகிதாச்சாரம் பின்பற்றப்படுகிறது. உதாரணமாக RTE படி 91 மாணவர்கள் இருந்தாலே 4-வது Post உண்டு. ஆனால், நடைமுறையில் 116 மாணவர்கள் இருந்தால் மட்டுமே 4-வது Post அனுமதிக்கப்படுகிறது.

இதற்கேற்ப உங்களது பள்ளியின் மாணவர் எண்ணிக்கையை EMISல் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உறுதிப்படுத்திய எண்ணிக்கையை ஆகஸ்ட் 15 வரை குறையவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

✍🏼செல்வ.ரஞ்சித் குமார்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.