வேளாண் பல்கலையில் மீண்டும் ஆன்லைன் கவுன்சிலிங் அறிவிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, July 30, 2023

வேளாண் பல்கலையில் மீண்டும் ஆன்லைன் கவுன்சிலிங் அறிவிப்பு

வேளாண் பல்கலையில் மீண்டும் ஆன்லைன் கவுன்சிலிங் அறிவிப்பு

அரசு பள்ளிகளில் ஆறு முதல் பிளஸ் 2 வரை படித்த மாணவர்களுக்கு உயர்கல்வியில் 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

வேளாண் பல்கலையில் இப்பிரிவின் கீழ் 408 இடங்கள் நிரப்பப்படவுள்ளன. இப்பிரிவின் கீழ் கவுன்சிலிங் முன்பே நடத்தப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்புக்கு திட்டமிடப்பட்டு இருந்தது. இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் வழங்கப்பட்ட தகவல்களில் குழப்பங்கள் எழுந்ததால் மீண்டும் மாணவர்களின் விபரங்கள் சரிபார்க்கப்பட்டன.அதன் படி அரசு பள்ளி ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்த மாணவர்கள் முன்பே பதிவு செய்து இருந்தாலும் பதிவு செய்யாமல் இருந்தாலும் விருப்ப பட்டியல் (சாய்ஸ் பில்லிங்) பதிவு செய்து நேற்றும் இன்றும் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் இன்று இரவு 12:00 மணி வரை விருப்ப கல்லுாரி பாடங்களை மாற்றி இறுதிசெய்து கொள்ளலாம்.மாணவர்கள் சேர்க்கை டீன் வெங்கடேச பழனிசாமி கூறுகையில் தற்போது வழங்கும் வாய்ப்பே இறுதியானது.

மாணவர்கள் தெளிவாக சாய்ஸ் தேர்வு செய்யவேண்டும்; அதன் பின் மாற்ற இயலாது. ஆக. 1ம் தேதி மாணவர்களின் மொபைல் எண் இ-மெயில் முகவரிக்கு ஒதுக்கப்பட்ட கல்லுாரி பாடப்பிரிவு குறித்து தகவல் அனுப்பப்படும். அதன் பின் 2ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும். மேலும் இதுகுறித்து சந்தேகங்கள் இருப்பின் 9488635077/9486425076 எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.