கிராமப்புற பெண்கல்வி ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் - 2022-2023ஆம் ஆண்டிற்கான கேட்புப்பட்டியல் அறிக்கை அனுப்பி வைக்க தெரிவிக்கப்பட்டது - நாளது வரையிலும் அனுப்பாமை - சார்பு - மாவட்டக் கல்வி அலுவலரின் (தொடக்கக் கல்வி) செயல்முறைகள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, June 19, 2023

கிராமப்புற பெண்கல்வி ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் - 2022-2023ஆம் ஆண்டிற்கான கேட்புப்பட்டியல் அறிக்கை அனுப்பி வைக்க தெரிவிக்கப்பட்டது - நாளது வரையிலும் அனுப்பாமை - சார்பு - மாவட்டக் கல்வி அலுவலரின் (தொடக்கக் கல்வி) செயல்முறைகள்

கிராமப்புற பெண்கல்வி ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் - 2022-2023ஆம் ஆண்டிற்கான கேட்புப்பட்டியல் அறிக்கை அனுப்பி வைக்க தெரிவிக்கப்பட்டது - நாளது வரையிலும் அனுப்பாமை - சார்பு - மாவட்டக் கல்வி அலுவலரின் (தொடக்கக் கல்வி) செயல்முறைகள்

Rural Girls Education Incentive Scheme - Questionnaire report for the year 2022-2023 notified to send - Non-sending till date - Dependency - Proceedings of District Education Officer (Elementary Education)

பார்வை (3) இல் காணும் கடிதத்தில் கிருஷ்ணாகிரி கல்வி மாவட்டத்தில் ஊத்தங்கரை வட்டாரக் கல்வி அலுவலரை தவிர இதர வட்டாரக் கல்வி அலுவலர்களிடமிருந்து நாளது வரையிலும் வரப்பெறவில்லை என்றும், மேற்படி கடிதத்துடன் அனுப்பி வைக்கப்பட்ட படிவத்தில் உடனடியாக தகுதி வாய்ந்த மாணவியர்கள் சார்பான விவரங்களை பூர்த்தி செய்து Soft Copy யினை dbewo.tnkgi@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உடனடியாக அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, வட்டாரக் கல்வி அலுவலர்கள் உடனடியாக தங்கள் ஒன்றியத்தில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவியர்களில் தகுதி வாய்ந்தவர்கள் சார்பான விவரங்களை சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களிடமிருந்து பெற்று தொகுத்து விவரங்களை உரிய படிவத்தில் பூர்த்தி செய்து பத்தி -2இல் குறிப்பிட்ட மின்னஞ்சல் முகவரிக்கு 19.05.2023க்குள் அனுப்பி விட்டு கையொப்பமிட்ட பிரதியினை தனி நபர் மூலம் கிருஷ்ணகிரி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் நேரில் ஒப்படைத்து விட்டு அதன் விவரத்தினை இவ்வலுவலகத்திற்கு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். இதில் ஏதேனும் காலதாமதம் ஏற்பட்டு அதனால் தகுதியுள்ள மாணலியர்களுக்கு ஊக்கத் தொகை கிடைக்கப் பெறவில்லை என்று புகார் எதும் பெறப்பட்டால் அதற்கு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்களே பொறுப்பாவார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.