தமிழக அரசு துறையில் சீனியாரிட்டி அடிப்படையில் மட்டுமே ஊழியர்களுக்கு பதவி உயர்வு - ஹைகோர்ட் அதிரடி! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, June 13, 2023

தமிழக அரசு துறையில் சீனியாரிட்டி அடிப்படையில் மட்டுமே ஊழியர்களுக்கு பதவி உயர்வு - ஹைகோர்ட் அதிரடி!

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு வந்த உத்தரவு.. பதவி உயர்வு இனிமே "இவர்களுக்கு" மட்டுமே.. ஹைகோர்ட் அதிரடி

தமிழக அரசு துறையில் சீனியாரிட்டி அடிப்படையில் மட்டுமே ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..

இதனால் 5 லட்சம் ஊழியர்கள் பதவி இறங்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.. என்ன காரணம்?

தமிழக அரசு பணிகளில் இட ஒதுக்கீடு அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது... இதில் ஒவ்வொரு ஜாதியினரும் வேலையில் சேர்ந்த பிறகு அவர்களுக்கு சீனியாரிட்டி அடிப்படையிலேயே புரமோஷன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.. இடஒதுக்கீடு: அதேபோல, 1990-ல் இருந்து, இட ஒதுக்கீடு அடிப்படையிலும் பதவி உயர்வு வழங்கப்பட்டு வந்தது.. அதேபோல, ரோஸ்டர் சிஸ்டம் என்று சொல்லக்கூடிய சுழற்சி அடிப்படையிலும், ஜாதி அடிப்படையில் சில பதவிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது.

அதாவது, காலியிடங்கள், பதவி மூப்பு அடிப்படையில் நிரப்பப்படாமல், சாதி அடிப்படையில் இந்த உதவி உயர்வு வழங்கப்பட்டது.

இதன் மூலம் வருவாய்த் துறை, நெடுஞ்சாலைத் துறை, போக்குவரத்து துறை, கணக்கு கருவூலம், வணிக வரித்துறை, ஊரக வளர்ச்சித் துறை உள்ளிட்ட 54 துறைகளில் குரூப்-4 மூலம் பணியில் சேர்ந்த பலர் அதிக பலன் அடைந்து வந்தனர்.

செயல்திட்டம்: இதனால், இதே நடைமுறையை பெரும்பாலும் செயல்படுத்தியும் வந்துள்ளனர்... இதன் மூலம் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 31 இடங்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 20 இடங்கள், தாழ்த்தப்பட்டோருக்கு 18 இடங்கள், பழங்குடியினருக்கு 1 இடம் மீதம் உள்ள இடங்களுக்கு பொது பிரிவு மூலம் பதவி உயர்வு வழங்கப்பட்டு வந்தது.

இதன்காரணமாக, பணி மூப்பு அடிப்படையில் சீனியாரிட்டி இருந்தும்கூட, பல பேருக்கு புரமோஷன் கிடைக்கவில்லை... இதனால் பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்கள், அரசின் இந்த முடிவை எதிர்த்து, கடந்த 2004-ல், சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடுத்தார்கள்..

2015-ம் ஆண்டு நீதிமன்றமும் இந்த வழக்கை விசாரித்து.. அப்போது, ஜாதி அடிப்படையில் பதவி உயர்வு வழங்குவது சட்ட விரோதம் என்றும், தமிழ்நாடு அரசு தேர்வாணைய விதிகளின்படிதான் பதவி உயர்வுகளை வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பு கூறியது.. இதை சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்தது... ஆனாலும் நீதிமன்றகோர்ட்டு உத்தரவை செயல்படுத்தாமல் பழைய நடைமுறைப்படியே பதவி உயர்வுகள் நிரப்பப்பட்டு வந்தது. இதனால் சுப்ரீம் கோர்ட்டில் 2021-ம் ஆண்டு, மறுபடியும் அப்பீல் செய்யப்பட்டது. விதிமுறைகள்: இது தொடர்பான உத்தரவு தற்போது வந்துள்ளது.. அதன்படி, "ஜாதி அடிப்படையில் பதவி உயர்வு நிரப்பக்கூடாது என்றும் பணி மூப்பு அடிப்படையில் தமிழ்நாடு அரசு தேர்வாணைய விதிகளை பின்பற்றி அரசுப் பணிகளில் பதவி உயர்வு அளிக்கப்பட வேண்டும், அனைத்து நிலைகளிலும் சீனியாரிட்டி லிஸ்டை சரியாக பின்பற்ற வேண்டும் என்று நீதிமன்றம் மறுபடியும் தெளிவுபடுத்தியிருக்கிறது.

இதையடுத்து, ரோஸ்டர் சிஸ்டத்தில் பதவி உயர்வு பெற்றவர்கள் இப்போது பதவி இறங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது.. குறிப்பாக வட்டார போக்குவரத்து துறை, ஊரக வளர்ச்சித் துறை, கணக்கு கருவூலத்துறை, வணிக வரித்துறை, காவல் துறை, நெடுஞ்சாலைத் துறை, வருவாய் உள்ளிட்ட 54 துறைகளில் பணியாற்றும் சுமார் 5 லட்சம் அரசு ஊழியர்களுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.

எதிர்பார்ப்பு: மேலும், ஒவ்வொரு அரசுத் துறையிலும் பணி மூப்பு அடிப்படையில் சீனியாரிட்டி பட்டியல் தயாரிக்கும் பணி வேகப்படுத்தப்பட்டு உள்ளது. இதனிடையே, சீனியாரிட்டியில் பணி மூப்பு மூலம் பதவி உயர்வு கிடைக்கும் நம்பிக்கையில் பல அரசு ஊழியர்கள் ஆர்வத்துடன் காத்துக்கிடக்கிறார்கள்

1 comment:

  1. Black Mark வாங்கியவர்களுக்கும் பணி மூப்பு எவ்வாறு பொருந்தும்?.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.