பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி என்பது துரதிருஷ்டவசமானது! - செய்தி அறிக்கை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, June 2, 2023

பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி என்பது துரதிருஷ்டவசமானது! - செய்தி அறிக்கை



பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி என்பது துரதிருஷ்டவசமானது!

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் முனைவர் - மன்றம் நா.சண்முகநாதன் செய்தி அறிக்கை

தமிழ்நாட்டில் காலந்தோறும் பதவி உயர்விற்கான கல்வித்தகுதி உடைய ஆசிரியர்கள் பணிமூப்பின் அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்டு சனவரி முதல் நாளினை அடிப்படையாகக் கொண்டு தேர்ந்த பட்டியல்கள் ( promotion penel) வெளியிடப்பட்டு பணிமூப்பின் (service seniority) அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு, தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டு வருகிறது. இத்தகு நடைமுறை மரபினை, தொடக்கக் கல்வித்துறையின் சார்நிலை விதிகளை மற்றும் பதவி உயர்விற்கான அரசு விதிகளை காப்பாற்றிட வேண்டிய பெரும் பொறுப்பு தமிழ்நாடு அரசின் முன் தற்போது உள்ளது.

பட்டதாரி ஆசிரியர், தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் மற்றும் நடுநிலைப்பள்ளி

பட்டதாரி தலைமை ஆசிரியர் பதவி உயர்வினை பெறுவதற்கு தற்போது ஆசிரியர் பணியில் உள்ளோர் ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சி பெறவேண்டும் என்பது துரதிருஷ்டவசமானது ஆகும், இத்தகு கருத்து ஏற்புடையது ஆகாது. இத்தகு நிலையானது பொருத்தமற்றதாகும்.

1 comment:

  1. கஷ்டப்படாம பதவி உயர்வு மூலம் பணம் மட்டும் வேண்டும். படிச்சி பாஸ் பண்ண முடியாது.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.