அரசு பள்ளி துப்புரவு பணி தனியாரிடம் ஒப்படைப்பு? - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, May 27, 2023

அரசு பள்ளி துப்புரவு பணி தனியாரிடம் ஒப்படைப்பு?



அரசு பள்ளி துப்புரவு பணி தனியாரிடம் ஒப்படைப்பு? Government school cleaning work handed over to private?

உள்ளாட்சி துறை ஒத்துழைப்பு இல்லாததால், அரசு பள்ளிகளின் துப்புரவு பணிகளை, தனியாரிடம் ஒப்படைக்க, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில், 38 ஆயிரம் அரசு பள்ளிகளில், துப்புரவு உள்ளிட்ட பராமரிப்பு பணிகள், மாவட்ட அளவில் உள்ளாட்சி துறையால் செய்யப்படுகின்றன.

அதாவது, சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் நிதி வழங்கப்பட்டு, இந்த பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால், பெரும்பாலான நாட்களில், அரசு பள்ளிகளின் வளாகங்கள் முறையாக சுத்தம் செய்யப்படுவதில்லை.

அதனால், பல நேரங்களில் ஆசிரியைகள், அலுவலக பணியாளர்கள், வளாகங்களை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுகின்றனர். சில நேரங்களில், மாணவ --- மாணவியரும் அப்பணியில் ஈடுபடுத்தப் படுகின்றனர்.

இந்நிலையில், அனைத்து அரசு பள்ளிகளிலும், துப்புரவு மற்றும் கழிப்பறை பராமரிப்பு பணிகளை, தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

அதற்கான செலவுகளை, பள்ளிக் கல்வித் துறை ஏற்க உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.