பள்ளி பாடப் புத்தக்கத்தில் கருணாநிதி குறித்த பாடம்: வரும் கல்வியாண்டு முதல் அமல் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, May 27, 2023

பள்ளி பாடப் புத்தக்கத்தில் கருணாநிதி குறித்த பாடம்: வரும் கல்வியாண்டு முதல் அமல்



பள்ளி பாடப் புத்தக்கத்தில் கருணாநிதி குறித்த பாடம்: வரும் கல்வியாண்டு முதல் அமல் Lesson on Karunanidhi in School Textbook: Effective from next academic year

பள்ளி பாடப் புத்தக்கத்தில் கருணாநிதி குறித்த பாடம்: வரும் கல்வியாண்டு முதல் அமல்

ஒன்பதாம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி தமிழ் மொழிக்கு ஆற்றிய பங்களிப்புகள் குறித்த தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

முன்னாள் முதல்வர் கருணாநிதி தமிழுக்கு ஆற்றிய பணிகள் குறித்த பாடம் இந்த ஆண்டு முதல் 9-ம் வகுப்பு பாடப் புத்தகத்தில் இடம் பெறும் என சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கடந்த ஏப்ரல் 20-ம் தேதி அறிவிப்பு வெளியிட்டார்.

7-வது பக்கத்தில்.. அதன்படி பள்ளிக் கல்விபாடத்திட்டத்தில் 9-ம் வகுப்பு புத்தகத்தின் 7-வது பக்கத்தில், "செம்மொழியான தமிழ்மொழியாம்' என்ற தலைப்பில் கருணாநிதி தமிழுக்கு ஆற்றிய பணிகள் குறித்த தகவல்கள் இடம் பெற்றுள்ளன. அதன் விவரம் வருமாறு:

கருணாநிதியின் நாவும் பேனாவும் தமிழுக்கு ஆயுதங்கள். இயல் எழுதி, இசை எழுதி,நாடகம் எழுதி முத்தமிழுக்கும் தம் பங்கை முழுமையாகஅளித்தவர் கருணாநிதி.

முத்தாரம், முரசொலி, வெள்ளி வீதிபோன்ற பத்திரிகைகளின் ஆசிரியராக இருந்தவர். 2010-ம் ஆண்டு உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டைநடத்தி இமயக் கொடுமுடிமுதல் குமரித் தாய்மடி வரை ‘செம்மொழியான தமிழ் மொழியாம்' என உரக்க ஒலிக்கச் செய்தவர் எனப் பல்வேறு விவரங்கள் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன.

அண்ணாவுக்கு கவிதை:

மேலும், முன்னாள் முதல்வர் அண்ணா இறந்தபோது கருணாநிதி எழுதிய ‘உன் கண்ணொளியின் கதகதப்பில் வளர்ந்தோமே' எனத் தொடங்கும் கவிதையும் அந்தப் பகுதியில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.