12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மதிப்பெண் பட்டியலை எவ்வாறு பெறுவது? - தேர்வுத்துறை விளக்கம். - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, May 11, 2023

12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மதிப்பெண் பட்டியலை எவ்வாறு பெறுவது? - தேர்வுத்துறை விளக்கம்.

How to get the mark sheet for students who have passed the 12th general exam? - Examination Department Explanation. -

12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மதிப்பெண் பட்டியலை எவ்வாறு பெறுவது? - தேர்வுத்துறை விளக்கம்.

12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி அடைந்த மாணவர்கள் நாளை முதல் அந்தந்த பள்ளிகளில் மதிப்பெண் பட்டியலை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பள்ளி தேர்வுத்துறை இயக்குனர் சா.சேது ராமவர்மா மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பிளஸ்-2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியலை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் www.dge.tn.gov.in என்ற இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அதன்பின் மதிப்பெண் பட்டியலில் உள்ள தகவல்களை சரிபார்த்து, கையொப்பம், பள்ளி முத்திரையிட்டு தயாராக வைத்துக்கொள்ள வேண்டும். அவற்றை பள்ளி மாணவர்களுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) முதல் வினியோகிக்க வேண்டும். மதிப்பெண் பட்டியலில் பிழைகள் ஏதும் இருப்பின் அதன் விவரங்களை இயக்குனரகத்துக்கு தெரிவிக்க வேண்டும். இந்த மதிப்பெண் பட்டியலை கல்லூரி சேர்க்கை உள்ளிட்ட அவசர தேவைகளுக்கு மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் அச்சிடப்பட்டு பின்பு வழங்கப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.