தமிழக அமைச்சரவை மாற்றம் Tamil Nadu cabinet reshuffle - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, May 11, 2023

தமிழக அமைச்சரவை மாற்றம் Tamil Nadu cabinet reshuffle



தமிழகத்தில் அமைச்சரவை இன்று (11.05.2023) மாற்றம் - நிதி அமைச்சராக இருந்த பி.டி.ஆர் பழனிவேல்தியாகராஜனுக்கு தகவல் தொழில்நுட்பத் துறை ஒதுக்கீடு !

முதல்வர் மு,க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் 5 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டது.திமுக அரசு 2021 மே 7ம் தேதி பதவி ஏற்றது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 33 அமைச்சர்கள் பதவி ஏற்றனர். பின்னர் 2022 மார்ச் மாதம் சிறிய மாற்றம் மட்டும் செய்யப்பட்டது. அதில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த சிவசங்கர், போக்குவரத்து துறைக்கும், அந்த துறை அமைச்சராக இருந்த கண்ணப்பன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்.அதைத் தொடர்ந்து கடந்த 2022 டிசம்பர் 14ம் தேதி உதயநிதி ஸ்டாலின் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டார். இதனால் அமைச்சரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் சேர்ந்து அமைச்சர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்தது.

இந்த நிலையில், தமிழக அமைச்சரவை 3வது முறையாக சிறிய அளவில் மாற்றியமைக்கப்பட்டது.

*பால்வளத்துறை அமைச்சர் நாசர் விடுவிக்கப்பட்டதை அடுத்து மன்னார்குடி எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜா, புதிய அமைச்சராக பதவியேற்றார். புதிய அமைச்சராக டிஆர்பி ராஜாவுக்கு ஆளுநர் ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.அவருக்கு தொழில்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது.

*தொழில்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசுவுக்கு நிதித்துறை ஒதுக்கப்பட்டது.நிதி மேலாண்மை, மனித வள மேலாண்மை, ஓய்வூதியம் , புள்ளியியல் ஆகிய துறைகளையும் ஏற்கனவே வகித்து வந்த தொல்லியல் துறையும் தங்கம் தென்னரசு கவனிப்பார்.

*நிதியமைச்சராக இருந்த பழனிவேல் தியாகராஜனுக்கு தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. *தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருந்த மனோ தங்கராஜுக்கு பால்வளத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது.

*தங்கம் தன்னரசுவிடம் இருந்த தமிழ் வளர்ச்சித் துறை செய்தித் துறை அமைச்சர் சாமிநாதனுக்கு கூடுதலாக வழங்கப்பட்டது.

இவ்வாறு 5 அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றி அமைக்கப்பட்டது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.