பணிநிரவல் மூலம் ஐந்தாண்டு சலுகையை இழக்கும் ஆசிரியர்கள் - கலந்தாய்வு விதிகளில் மாற்றங்கள் கொண்டு வர கோரிக்கை!! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, May 6, 2023

பணிநிரவல் மூலம் ஐந்தாண்டு சலுகையை இழக்கும் ஆசிரியர்கள் - கலந்தாய்வு விதிகளில் மாற்றங்கள் கொண்டு வர கோரிக்கை!!



பணிநிரவல் மூலம் ஐந்தாண்டு சலுகையை இழக்கும் ஆசிரியர்கள் - கலந்தாய்வு விதிகளில் மாற்றங்கள் கொண்டு வர கோரிக்கை!!

நான் ஒரு பட்டதாரி ஆசிரியை.

26/09/2014 அன்று பணியில் அமர்த்தப்பட்டு 22/06/2018 ல் பணிநிரவல் மூலம் பணியாற்றிய அதே மாவட்டத்தில் பணி மாற்றல் பெற்றேன்.

தற்போது பணி மாறுதல் கலந்தாய்வில் ஒரே பள்ளியில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பணி பணியாற்றினால் முன்னுரிமை என வகுக்கப்பட்டுள்ளது. என் போல் ஆசிரியர்களுக்கு அது சாத்தியமில்லை. பணி நிரவல் என்பது நாங்கள் விரும்பி பெற்றது இல்லை. (வெளி மாவட்டத்தில் இருந்து வந்த எங்களுக்கு அந்தப் பள்ளியில் நிரவல் வரும் என்று தெரியாது). பணி நிரவல் இல்லையென்றால் நாங்களும் அதே பள்ளியில் இருந்திருப்போம். அப்படி என்றால் எட்டு வருடங்கள் முழுமையாக நிறைந்திருக்கும் நாங்களும் இந்த முன்னுரிமையை பெற்றிருக்கலாம்.

தற்போது 4 வருடங்களும் 10 மாதங்களும் முடிவடைந்துள்ள நிலையில் இந்த முன்னுரிமையை நாங்கள் பெற முடியவில்லை. சென்றாண்டு கலந்தாய்விலும் பணி நிரவல் காரணமாக சீனியாரிட்டி ரேங்க் பின்னோக்கி சென்றது. தற்போதும் அதே நிலையில் உள்ளோம். இது எவ்விதத்தில் நியாயம். அதிகாரிகள் உரிய மாற்றங்கள் கொண்டு வந்து யாரையும் பாதிக்காதவாறு பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.