இன்ஜினியரிங் கவுன்சிலிங் ஆகஸ்ட் 2ல் துவக்கம் Engineering counseling starts on 2nd August - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, May 5, 2023

இன்ஜினியரிங் கவுன்சிலிங் ஆகஸ்ட் 2ல் துவக்கம் Engineering counseling starts on 2nd August



இன்ஜினியரிங் கவுன்சிலிங் ஆகஸ்ட் 2ல் துவக்கம்

இன்ஜினியரிங் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு, அடுத்த மாதம் 4ம் தேதி நிறைவடையும் நிலையில், மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், ஆக., 2ல் துவங்குகிறது.

தமிழக அரசு, அரசு உதவிபெறும் இன்ஜினியரிங் கல்லுாரிகள், அண்ணா பல்கலை, அதன் உறுப்பு கல்லுாரிகள், அண்ணாமலை பல்கலை மற்றும் சுயநிதி இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., - பி.ஆர்க்., ஆகிய படிப்புகளில், அரசு ஒதுக்கீட்டில் சேர்வதற்கானவிண்ணப்ப பதிவு நேற்று துவங்கியது. மாணவர்கள், www.tneaonline.orgஎன்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து வருகின்றனர்.

இதுகுறித்து, உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி அளித்த பேட்டி:

தமிழகத்தில், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை மறுநாள், அதாவது, 8ம் தேதி வெளியாக உள்ளது. இன்ஜி., படிப்புக்கான விண்ணப்பப் பதிவை, மாணவர்கள் செய்து கொள்ளலாம்.

தேர்வு முடிவுகள் வந்த நாள் முதல், அடுத்த மாதம், 9ம் தேதி வரை சான்றிதழ்களை பதிவேற்றலாம். ஆக.,2 முதல் அக்., 3 வரை கலந்தாய்வு நடைபெறும். கடந்த ஐந்து ஆண்டுகளில், கலந்தாய்வில் பங்கேற்ற கல்லுாரிகளின் பட்டியல், அவற்றின் தர வரிசைஉள்ளிட்ட அனைத்து விபரங்களும் இணையதளத்தில் உள்ளன. அவற்றை மாணவர்கள் ஆராய்ந்து, கல்லுாரிகளை தேர்வு செய்யலாம்.

அதேபோல், கல்லுாரி கல்வித் துறை சார்பில், தமிழகத்தில் உள்ள, 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளுக்கானமாணவர் சேர்க்கைக்கு, www.tngasa.com என்ற இணையதளம் வழியாக, 8ம் தேதி முதல், 19ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

இதில், ஒரே விண்ணப்ப கட்டணத்தில், ஐந்து கல்லுாரிகளுக்கு விண்ணப்பிக்கலாம். புதிதாக கல்லுாரிகள் துவக்கப்படுவதால், அனைவருக்கும் இடம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.

கல்வியின் தரத்தை உயர்த்த, புதுமைப்பெண், நான் முதல்வன், திறன் மேம்பாட்டுதிட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

இவ்வாறு, அவர்கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.