ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வில் விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, May 1, 2023

ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வில் விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு



ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வில் விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு

ஒரே பணியிடத்தில் 5 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து முன்னுரிமை கோருபவர்கள் தனியே பணி அனுபவச் சான்றினை பதிவேற்றம் செய்யத் தேவையில்லை.

இப்பள்ளியில் பணியேற்ற நாள் என்பதில், எந்த தேதியைக் குறிப்பிட்டுள்ளீர்களோ, அதற்குரிய சான்றினை எதுவாயினும் (Appointment Order/ Transfer Order/ Joining Order) ஒன்றினை தாங்களே பதிவேற்றம் செய்துகொள்ள முடியும்.

அதற்கான வசதி உங்களுடைய EMIS Portal லில் வழங்கப்பட்டுள்ளது..

All your messages fall in the following buckets. Please read. You need not post more messages about the following issues. Otherwise, people will miss this message.

1. Unable to updated PHM , MHM vacancy. Its now working. You can update.

2. MHM transfer application not showing in BEO login - Ask them to approve in School login. It will showin BEO login.

3. HS HM, HSS HM transfer application not showing in DEO(S) login - As of now pls approve using DEO(E) login. Will have it resolved by tomorrow.

4. Unable to enter more than 1 subject vacancy for a school in BT / PG - Working on it. Will resolve and inform.

5. Counselling dropdown not showing for biology teachers - It will not show. Only if their subject is botany / zoology, it will be enabled. We have told this many many times Transfer Application

உடற்கல்வி இயக்குநர் நிலை-1/ உடற்கல்வி இயக்குநர் நிலை-II மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பொது மாறுதலுக்குப் பிறகு அறிவிக்கப்படும். ஐந்து வருடங்களுக்கு மேல் பணியாற்றும் ஆசிரியர்கள்/ தலைமை ஆசிரியர்கள் அதற்கான ஆவணங்கள் எதையும் உயர் அலுவரிடம் பெற்று பதிவேற்றம் செய்யத் தேவை இல்லை. விண்ணப்பத்தில் நடப்புப் பணியில் சேர்ந்த தேதி உள்ளதால் அதன் அடிப்படையில் மாறுதல் கலந்தாய்வுக்கு முதுநிலை தானாகவே முடிவு செய்யப்படும். சேர்ந்தத் தேதி தவறாக இருப்பின் பள்ளி EMIS login வழியே சரி செய்து பின்னர் விண்ணப்பத்தினை சமர்ப்பிக்கலாம்.

ஆசிரியர்களால் EMIS தளத்தின் வழியே அளிக்கப்பட்டு, தலைமை ஆசிரியரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மாறுதல் விண்ணப்பங்களைச் சம்மந்தப்பட்ட அலுவலரிடம் (BEO / DEO / CEO) ஒப்படைக்க திங்கட்கிழமை (01-May-2023) மாலை 5 மணி வரை காலக்கெடு வழங்கப்பட்டிருந்தது. தொடர் விடுமுறை மற்றும் பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெற்று வருவதை கருத்தில் கொண்டு, விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு செவ்வாய்க்கிழமை (02-May-2023) மாலை 5 மணி வரையும், சம்மந்தப்பட்ட அலுவலரிடம் (BEO / DEO / CEO) ஒப்படைப்பதற்கான காலக்கெடு புதன்கிழமை (03- May-2023) மாலை 5 மணி வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.