census of out-of-school children - பள்ளி செல்லாத குழந்தைகள் கணக்கெடுப்பை தொடங்க உத்தரவு - வீடு, வீடாக சென்று நடத்த உத்தரவு - வழிகாட்டுதல்கள் வெளியீடு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, April 3, 2023

census of out-of-school children - பள்ளி செல்லாத குழந்தைகள் கணக்கெடுப்பை தொடங்க உத்தரவு - வீடு, வீடாக சென்று நடத்த உத்தரவு - வழிகாட்டுதல்கள் வெளியீடு

பள்ளி செல்லாத குழந்தைகள் கணக்கெடுப்பை தொடங்க உத்தரவு - வீடு, வீடாக சென்று நடத்த உத்தரவு - வழிகாட்டுதல்கள் வெளியீடு - Order to initiate census of out-of-school children - Order to conduct door-to-door survey - Issue of guidelines

அனைத்து தரப்பினரையும் சேர்க்க அறிவுறுத்தல்

கணக்கெடுப்பின்போது, நடைபாதையில் வசிப்பவர்கள், மேம்பா லங்களின் கீழ் வசிக்கும் வீடற்றவர்கள், போக்குவரத்து சிக்னலின் இடையே காணப்படும் விற்பனையாளர்கள் மற்றும் வெளி மாநி லங்களிருந்து இடம் பெயர்ந்தவர்கள் உள்ள பகுதிகளில் இருக்கும் குடும்பங்களிலும், பள்ளி செல்லா குழந்தைகள் உள்ளனரா என்ப தனை கண்டறிய அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், ரயில் நிலையம், பேருந்து நிலையம், உணவகங்கள், பழம், பூ மற்றும் காய்கறி அங்காடி மற்றும் குடிசைப் பகுதிகள், கடலோர மாவட்டங்களிலுள்ள கரையோர பகுதிகளில் வாழும் மீனவ குடியிருப்பு பகுதிகள், விழாக் கள் நடைபெறும் பகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். சந்தைகள், ஆற்றங்கரையோர குடியிருப்பு பகுதிகள், சுற்றுலா தளங்கள், செங்கல் சூளைகள், கட்டுமானப் பணிகள், அரிசி ஆலை, கல்-குவாரி, மணல்குவாரி தொழிற்சாலைகள் மற்றும் விவசாயம் போன்றவற்றில் பணிபுரிய பல்வேறு மாநிலங்கள், மாவட்டத்திலிருந்து தொழில் நிமித்தமாக தமிழகத்திற்கு வருகின்றனர். தொழிற்சாலை, மார்க்கெட் பகுதிகளில், கணக்கெடுப்பு நடத்தும் போது குழந்தை தொழிலாளர் நலத்துறை, மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் மற்றும் காவல் துறையுடன் இணைந்து, ஆய்வு நடத்திட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.



பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் ஆரம்பக் கல்வி பதிவேடு புதுப்பித்தல் வழிகாட்டு நெறிமுறைகள் - சார்பு SPD & DEE செயல்முறைகள்.
CLICK HERE TO DOWNLOAD PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.