ரூ. 3 லட்சம் பரிசுத் தொகையுடன் நடத்தப்படும் என்விரோ சால்வர் ஹேக்கத்தான் - Press Release - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, April 30, 2023

ரூ. 3 லட்சம் பரிசுத் தொகையுடன் நடத்தப்படும் என்விரோ சால்வர் ஹேக்கத்தான் - Press Release



ரூ. 3 லட்சம் பரிசுத் தொகையுடன் நடத்தப்படும் என்விரோ சால்வர் ஹேக்கத்தான் பற்றிய பத்திரிக்கை செய்தி

27.05.2023 முதல் 31.05.2023 வரை ரூ. 3 லட்சம் பரிசுத் தொகையுடன் நடத்தப்படும் என்விரோ சால்வர் ஹேக்கத்தான் பற்றிய பத்திரிக்கை செய்தி



செய்தி வெளியீடு எண் : 794 நாள்:28.04.2023 செய்தி வெளியீடு

27.05.2023 முதல் 31.05.2023 வரை ரூ. 3 லட்சம் பரிசுத் தொகையுடன் நடத்தப்படும் என்விரோ சால்வர் ஹேக்கத்தான் பற்றிய பத்திரிக்கை செய்தி

சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை (மிஷன் லைஃப்–Mission LIFE) என்பது இந்திய அரசாங்கத்தின் ஒரு புதிய முன்முயற்சியாகும். இது சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதன் பொருட்டு "அக்கறையற்ற அழிவுகரமான நுகர்வுக்கு" பதிலாக "அக்கறையுள்ள ஆழ்ந்து ஆராய்ந்த நுகர்வை" முன்னெடுக்கும் வெருஜன இயக்கமாகும். இயற்கையுடன் ஒத்திசைந்த மற்றும் தீங்கு விளைவிக்காத வாழ்க்கை முறையை கடைப்பிடிக்க தனிநபர்களையும், சமூகங்களையும் ஊக்குவிப்பதே இதன் நோக்கமாகும். இத்தகைய வாழ்க்கை முறையை கடைப்பிடிப்பவர்கள் புவியைப் பாதுகாக்கும் மக்கள் என்று அங்கீகரிக்கப்படுவார்கள். மிஷன் லைஃப்பின் முக்கிய கருப்பொருள்கள்: ஆற்றல் சேமித்தல், தண்ணீர் உபயோகத்தைக் சேமித்தல், குறைத்தல், ஒருமுறை நிலையான பயன்படுத்தும் உணவு பிளாஸ்டிக் முறைகளை ஏற்றுக்கொள்ளுதல், கழிவுகள் குறைத்தல், ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளை ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் மின் கழிவு குறைத்தல் போன்றவையாகும் மிஷன் லைஃப் கருப்பொருள்கள் மக்களைச் சென்றடைவதற்கு ஏதுவாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் இணையதளம் மற்றும் சமூக ஊடகப் பக்கங்களில் மிஷன் லைஃப் பற்றிய ஆக்கங்கள் மற்றும் காணொளிகளைப் பதிவேற்றம் செய்வது போன்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

மேலும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் 27.05.2023 முதல் 31.05.2023 வரை "தண்ணீர் சேமித்தல்" மற்றும் "ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் உபயோகத்தைக் குறைத்தல்" ஆகிய இரண்டு கருப்பொருள்களில் ஒரு வாரம் நீடிக்கும் ஹேக்கத்தான் நடத்த முன்வந்துள்ளது. இதில் மாணவர்கள். ஆராய்ச்சியாளர்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் புது தொழில் முனைவோர்கள் ஆகியவர்கள் கலந்து கொண்டு பல்வேறு சுற்றுசூழல் சம்பந்தப்பட்ட சவாலான பிரச்சனைகளுக்கு தீர்வுகள் மற்றும் புதுமையான யோசனைகளை முன்வைக்கலாம். இதில் கலந்து கொண்டு வெற்றி பெறுபவர்களுக்கு நினைவுச் சின்னங்கள் மற்றும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும். ஒவ்வொரு பிரிவிற்கும் 5 பரிசுகள் வழங்கப்படும். முதல் பரிசாக ரூ. 3 லட்சம், 2வது பரிசு ரூ. 2 லட்சம் மற்றும் 3 வது பரிசு 3 நபர்களுக்கு தலா ரூ.1 லட்சம் ஜூன் 5, 2023 உலக சுற்றுச்சூழல் தினத்தன்று வழங்கப்படும்.

தண்ணீர் பற்றாக்குறை மற்றும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் அகற்றல் தொடர்பான பிரச்சனைகளுக்கு செயல்படுத்தக்கூடிய மற்றும் அளவிடக்கூடிய தீர்வுகளை இந்த ஹேக்கத்தான் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாணவர்கள் மற்றும் புது தொழில் முனைவோர்கள் தங்கள் யோசனைகளை அரசு மற்றும் தொழில்துறையில் உள்ள தலைசிறந்த நிபுணர்களிடம் முன்வைக்கவும், அவர்களின் யோசனைகளை வணிகமயமாக்கவும் ஹேக்கத்தான் ஒரு தளத்தையும், வாய்ப்பையும் வழங்கும். ஹேக்கத்தான் பற்றிய விவரங்கள் மற்றும் விண்ணப்பப் படிவம் ஆகியவை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய இணையதளமான www.tnpcb.gov.n இல் கிடைக்கும். மேலும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் சமூக ஊடகப் பக்கங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் டூவிட்டர் பக்கங்களிலும் இவ்விவரங்கள் கிடைக்கின்றன.

கலந்துகொண்டு நிலையான தகுதியான அனைத்து போட்டியாளர்களையும் ஒரு வாரம் நீடிக்கும் இந்த ஹேக்கத்தானில் உருவாக்குவதற்கான சுற்றுச் சூழலை கருத்துகளை தங்களின் யோசனைகள் மற்றும் வெளிப்படுத்தவும் ரொக்கப் பரிசுகளை வெல்லவும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் கேட்டுக்கொள்கிறது.

வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.