மே 8ம் தேதி பொதுத்தேர்வு முடிவுகள் - தேர்வுத்துறை அறிவிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, April 26, 2023

மே 8ம் தேதி பொதுத்தேர்வு முடிவுகள் - தேர்வுத்துறை அறிவிப்பு

பொதுத்தேர்வு முடிவுகள் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களால் 08.05.2023 ( திங்கட்கிழமை ) அன்று வெளியிடப்படுகிறது - தேர்வுத்துறை

மேல்நிலை இரண்டாமாண்டு ( 2 ) -மார்ச் / ஏப்ரல் 2023. பொதுத்தேர்வு முடிவுகள் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களால் 08.05.2023 ( திங்கட்கிழமை ) அன்று அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்டரங்கில் வெளியிடப்படவுள்ளது. தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் நேரம் மற்றும் மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை அறிந்துக்கொள்ளும் இணையதள முகவரி பின்வருமாறு தெரிவிக்கப்படுகிறது.

மே 8ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவு காலை 9.30 மணிக்கு வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.*

தமிழகத்தில் மார்ச் 13ம் தேதி துவங்கிய பிளஸ் 2 தேர்வுகள் கடந்த 3ம் தேதி நிறைவடைந்தன.

பிளஸ்2 தேர்வை 8 லட்சத்து 75 ஆயிரம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ளனர். இதற்கான தேர்வு முடிவுகள் மே 5ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

விடைத்தாள் திருத்தும் பணி மற்றும் மதிப்பெண்களை பதிவேற்றும் செய்யும் பணி முடிவடையும் நிலையில் உள்ளது. இந்நிலையில் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு, வரும் மே 7ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு நாடு முழுவதும் 20 லட்சத்து 87 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் இருந்து ஒன்றரை லட்சம் பேர் நீட் தேர்வெழுத உள்ளனர்.

நீட் தேர்வுக்கு பிறகு, பிளஸ் 2 தேர்வு முடிவை வெளியிடலாமா என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர்.

இந்நிலையில் மே 8ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவு காலை 9.30 மணிக்கு வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

tnresults.nic.in, www.dge1.tn.nic.in , www.dge2.tn.nic.in/ -ல் பொதுத்தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.