6 - 9 Std | Annual Exam April 2023 - Time Table - 27 Districts Updated - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, April 16, 2023

6 - 9 Std | Annual Exam April 2023 - Time Table - 27 Districts Updated

ஆறு முதல் ஒன்பது வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டு இறுதி தேர்வு கால அட்டவணை சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்
6 முதல் 9ம் வகுப்பு வரை இறுதி தேர்வு எப்போது?

தமிழகத்தில், பிளஸ் 2 பொது தேர்வு முடிந்து விட்டது. பிளஸ் 1 பொது தேர்வு இன்று முடிகிறது. பத்தாம் வகுப்பு தேர்வு இன்று துவங்குகிறது.

இந்நிலையில், ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, ஆண்டு இறுதித் தேர்வு எப்போது என, பெற்றோர் எதிர்பார்த்து உள்ளனர்.

பள்ளிக்கல்வித் துறையின் ஆண்டு அட்டவணைப்படி, வரும், 20ம் தேதி முதல், 28ம் தேதி வரை, ஆண்டு இறுதி தேர்வுகளை நடத்த வேண்டும்.

இந்நிலையில், ஆண்டு இறுதி தேர்வுகள் தொடர்பாக, ஒவ்வொரு மாவட்ட முதன்மை கல்வி அலுவலரும், தேர்வு அட்டவணையை முடிவு செய்யலாம் என, பள்ளிக்கல்வி கமிஷனரகம் மற்றும் தொடக்க கல்வி துறை சார்பில், அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இதன்படி, சில மாவட்டங்களில், 11ம் தேதியும்; சில மாவட்டங்களில், 17ம் தேதியும் ஆண்டு இறுதி தேர்வுகளை துவங்க முடிவாகி உள்ளது.

பள்ளியின் கடைசி வேலைநாள் வரும், 28ம் தேதி என்பதால், மாணவர்களுக்கு தேர்வுகள் முடிந்தாலும், 28ம் தேதி வரை ஆசிரியர்கள் பணிக்கு வர வேண்டும்; 29ம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்படும் என, பள்ளிக்கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

6 - 9 Std | Annual Exam April 2023 - Time Table தமிழ்நாட்டில் 6 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்டங்களில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் தனித்தனியாக தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளனர். அதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் ஏப்ரல் 11 முதல் 24-ம் தேதி வரை 6 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆண்டு தேர்வு நடைபெறும் என திருவள்ளூர் முதன்மைக் கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். மதுரை மாவட்டத்தில் ஏப்ரல் 21 முதல் 28 வரை ஆண்டு தேர்வு நடைபெறும் என அம்மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். இதேபோல் அந்தந்த மாவட்டங்களுக்கும் தனித்தனியே ஆண்டு இறுதித் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டிருக்கிறது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள வழிமுறைகளை பின்பற்றி எவ்வித புகார்களுக்கும் இடம் அளிக்கா வண்ணம் தேர்வு நடத்த வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. ஆண்டு தேர்வுக்கான முழு கால அட்டவணையையும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மூலம் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது
ஏப்ரல் 11ம் தேதி முதல் 24ம் தேதிவரை 6 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு ஆண்டு தேர்வு நடைபெறும் என திருவள்ளூர் முதன்மைக் கல்வி அலுவலர் அறிவித்துள்ளது. ஆண்டு தேர்வுக்கான அட்டவணையும் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.