Top Sheet Downloading Instructions for SSLC by DGE - இடைநிலைக் கல்வி விடுப்பு சான்றிதழ் பொதுத்தேர்வு ஏப்ரல் 2023 முகப்புத்தாட்கள் - விடுபட்ட / பார்கோடு இல்லாத / சேதமடைந்த முகப்புத்தாட்கள் - இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்வதற்கு அறிவுரைகள் வழங்குதல் தொடர்பாக - அரசுத் தேர்வுகள் இயக்ககம் - செய்திக் குறிப்பு - நாள்:13.03.2023 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, March 13, 2023

Top Sheet Downloading Instructions for SSLC by DGE - இடைநிலைக் கல்வி விடுப்பு சான்றிதழ் பொதுத்தேர்வு ஏப்ரல் 2023 முகப்புத்தாட்கள் - விடுபட்ட / பார்கோடு இல்லாத / சேதமடைந்த முகப்புத்தாட்கள் - இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்வதற்கு அறிவுரைகள் வழங்குதல் தொடர்பாக - அரசுத் தேர்வுகள் இயக்ககம் - செய்திக் குறிப்பு - நாள்:13.03.2023

Top Sheet Downloading Instructions for SSLC by DGE - Secondary Education Leaving Certificate General Examination April 2023 Cover Sheets - Missing / No Bar Code / Damaged Cover Sheets - Regarding Issuance of Instructions for Downloading through Website - Directorate of Government Examinations - Press Release - Date: 13.03.2023
அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை-6- இடைநிலைக் கல்வி விடுப்பு சான்றிதழ் பொதுத்தேர்வு ஏப்ரல் 2023 முகப்புத்தாட்கள் - விடுபட்ட / பார்கோடு இல்லாத / சேதமடைந்த முகப்புத்தாட்கள் - இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்வதற்கு அறிவுரைகள் வழங்குதல் தொடர்பாக.

பார்வை - இவ்வலுவலக இதே எண்ணிட்ட கடிதம், நாள் 10.03.2023

பார்வையில் காணும் கடிதத்தில், நடைபெறவுள்ள ஏப்ரல் 2023 இடைநிலைக் கல்வி விடுப்பு சான்றிதழ் பொதுத் தேர்விற்கான முகப்புத் தாட்களை 14.03.2023 முதல் 17.03.2023 வரையிலான நாட்களில் தேர்வு மைய தலைமையாசிரியர்களுக்கு வழங்கி முதன்மை விடைத்தாளுடன் முகப்புத்தாட்களை இணைத்து தைக்கும் பணியினை மேற்கொள்ளத் தெரிவிக்கப்பட்டது.

எனவே, தேர்வு மையத் தலைமை ஆசிரியர்கள் தங்கள் மையத்தில் தேர்வெழுதும் அனைத்துத் தேர்வர்களுக்கும் தேர்வெழுதும் அனைத்து பாடங்களுக்கான முகப்புத் தாட்கள் பெறப்பட்டுள்ளனவா என்பதை தங்கள் தேர்வு மையத்துடன் இணைக்கப்பட்டுள்ள பள்ளி தலைமையாசிரியர்களிடமிருந்து பதிவிறக்கம் செய்த பெயர்ப்பட்டியலை பெற்று முகப்புத்தாட்களில் அனைத்துப் பதிவுகளும் சரியாக உள்ளனவா என்பதனை உறுதி செய்து கொள்ள வேண்டும். முகப்புத்தாட்கள் கிடைக்கப்பெறாத / சேதமடைந்த (Bar code -Reg.No. over lapped, bar code smudged) முதன்மை மொழிப் பாடம் மாற்றம், பயிற்று மொழி மாற்றம் கொண்ட தேர்வர்களுக்கு புதிய முகப்புத்தாட்களை தேர்வு மையத்திற்கென வழங்கப்பட்டுள்ள User ID / Password கொண்டு இணையதளம் மூலம் 14.03.2023 அன்று முதல் அந்தந்த தேர்வு மையத்திலேயே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்பதை சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்களை அறிவுறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பெயர்பட்டியலில் சரியான பதிவுகள் இருந்து, தேர்வு மையங்களுக்கு விநியோகிக்கப்பட்ட முகப்புத்தாட்களில் கீழ்க்குறிப்பிட்டுள்ள திருத்தங்கள் ஏதேனும் இருந்தால் பின்வரும் வழிமுறைகளின்படி செயல்பட தேர்வு மைய தலைமையாசிரியர்களுக்கு அறிவுரை வழங்கிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

1. தேர்வரின் பெயர் (Candidate's Name)

2. புகைப்படம் மாறியிருத்தல்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.