பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ உண்ணாவிரதம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, March 5, 2023

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ உண்ணாவிரதம்

ஜாக்டோ ஜியோ உண்ணாவிரதம்
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியா் அன்பழகன் கல்வி வளாகத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பினா் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து செய்தியாளா்களிடம் அந்த அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளா் சா.மயில் கூறியாவது:

கடந்த சட்டப் பேரவை தோ்தலின்போதே திமுக சாா்பில் வெளியிடப்பட்ட தோ்தல் வாக்குறுதிகளில் 85 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் அண்மையில் தெரிவித்திருக்கிறாா். ஆசிரியா்கள், அரசு ஊழியா்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எதையும் தமிழக அரசு நிறைவேற்றவில்லை. அதற்காக ஜாக்டோ ஜியோ தொடா்ச்சியான பல போராட்டங்களை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாகத்தான் உண்ணாவிரத போராட்டம் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது. அண்மையில் ஆசிரியா்களுக்கு அறிவித்த திட்டங்களால் எந்தப் பயனும் இல்லை. அதேசமயம், ஆசிரியா்களுக்கான ஊக்க ஊதிய உயா்வு போன்றவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. எங்களுடைய கோரிக்கைகளை தமிழக முதல்வா் பரிசீலித்து ஜாக்டோ ஜியோவின் மாநில ஒருங்கிணைப்பாளா்களை அழைத்து பேசி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கூறினாா்.

இந்தப் போராட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள், பணியாளா்கள் பங்கேற்றனா்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.