இன்சூரன்ஸ் பாலிசி எடுத்தவர் சர்க்கரை நோயால் இறந்தாலும் காப்பீடு தொகை தர தேசிய ஆணையம் உத்தரவு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, March 17, 2023

இன்சூரன்ஸ் பாலிசி எடுத்தவர் சர்க்கரை நோயால் இறந்தாலும் காப்பீடு தொகை தர தேசிய ஆணையம் உத்தரவு!

இன்சூரன்ஸ் பாலிசி எடுத்தவர் சர்க்கரை நோயால் இறந்தாலும் காப்பீடு தொகை தர தேசிய ஆணையம் உத்தரவு!

சர்க்கரை நோயால் இறந்த நபரின் குடும்பத்துக்கு ₹5 லட்சம் காப்பீட்டு தொகையை எல்ஐசி நிறுவனம் வழங்க வேண்டும்’ என்று தேசிய குறைதீர்ப்பு ஆணையம் (என்சிடிஆர்சி) உத்தரவிட்டுள்ளது. சண்டிகரை சேர்ந்தவர் நீலம் சோப்ரா. இவரது கணவர் சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், அவரது கணவர் கடந்த 2003ம் ஆண்டு தான் பணியாற்றும் நிறுவனம் மூலம் காப்பீட்டு தொகை பெறுவதற்காக விண்ணப்பித்து இருந்தார். ஆனால், அவர் 2004ம் ஆண்டு இதய செயலிழப்பு காரணமாக இறந்தார். அதற்கு பிறகு நீலம் சோப்ரா தனது கணவரின் காப்பீட்டுத் தொகையை கேட்டு விண்ணப்பித்தார். ஆனால் தற்ேபாது அவரது இன்சூரன்ஸ் காலாவதியாகி விட்டது என்று கூறி அந்த விண்ணப்பத்தை நிராகரித்து விட்டது.

இதையடுத்து, தேசிய நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையத்தில் நீலம் சோப்ரா வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்து ஆணையம் அளித்துள்ள தீர்ப்பில் கூறியிருப்பதாவது:

இறந்த போன நபர் இதயம் மற்றும் மூச்சு திணறல் காரணமாக இறந்துள்ளார். அந்த பிரச்னை அவர் இறந்த தேதிக்கு முன்னதாக 5 மாதங்கள் மட்டும்தான் இருந்துள்ளது. அதனால், இது வழக்கமான நோயும் அல்ல. மேலும், சர்க்கரை நோய் என்பது முன்பே சில காலம் இருந்திருந்தாலும் இறந்த நபர் காப்பீட்டுத் தொகை கேட்டு விண்ணப்பிக்கும் போது சர்க்கரை நோ்ய் கட்டுக்குள் இருந்துள்ளது தெளிவாக தெரிகிறது. அதனால், காப்பீடு செய்யும் நபர் இதுபோன்ற நோய்களை மறைத்து விட்டார் என்று காரணம் கூற உரிமை இல்லை. காப்பீட்டு தொகை வழங்க மறுத்தால் காப்பீடு செய்தவர்கள் பாதிக்கப்படுவார்கள். காப்பீடு செய்யும் போது முன்பே இருக்கும் நோய் பற்றிய விவரங்களை மறைத்திருந்தாலும் அது இறப்புக்கு காரணமாக இருக்க முடியாது அல்லது இறப்புக்கு நேரடியான தொடர்பு இல்லாத போது அதை வைத்து காப்பீட்டு தொகை கேட்க முடியாது என்று முற்றிலும் மறுக்கக் கூடாது.எனவே, இறந்த நபரின் குடுப்பத்தினருக்கு எல்ஐசி நிறுவனம் ரூ 5 லட்சம் வழங்க வேண்டும், ஈட்டுத் தொகையாக ரூ ரூ 25 ஆயிரம், நீதிமன்ற வழக்கு செலவுக்காக ரூ 5 ஆகியவற்றை 45 நாட்களுக்குள் சண்டிகர் எல்ஐசி கிளை வழங்க வேண்டும். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.