அரசுப் பள்ளி மாணவிகளுக்கு தற்காப்புக் கலை பயிற்சி தொடக்க விழா - பள்ளிக் கல்வி ஆணையரின் செய்திக் குறிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, March 17, 2023

அரசுப் பள்ளி மாணவிகளுக்கு தற்காப்புக் கலை பயிற்சி தொடக்க விழா - பள்ளிக் கல்வி ஆணையரின் செய்திக் குறிப்பு

அரசுப் பள்ளி மாணவிகளுக்கு தற்காப்புக் கலை பயிற்சி தொடக்க விழா - பள்ளிக் கல்வி ஆணையரின் செய்திக் குறிப்பு!

தற்காப்புக் கலைப் பயிற்சியின் தொடக்க விழா திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மைதானத்தில் மார்ச் 17, 2023 அன்று மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது.

மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களும் மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள், சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் திரு. எ.வ.வேலு அவர்களும் விழாவைத் துவக்கி வைத்து உரையாற்றுகின்றனர். நிகழ்வுக்கு திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. தெ.பாஸ்கர பாண்டியன், இ.ஆ.ப தலைமை வகிக்க, நாடாளுமன்ற உறுப்பினர்கள். சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்கின்றனர்.

இவ்விழாவில் கராத்தே, ஜூடோ, டேக்வாண்டோ, சிலம்பம் போன்ற தற்காப்புக் கலைப் பயிற்சி நிகழ்வுகளை மாணவிகள் நிகழ்த்திக் காட்டுவர். விளையாட்டுப் போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.

நிகழ்வுக்கு தங்கள் நிறுவனத்தில் இருந்து செய்தியாளர்களை அனுப்பி செய்தி சேகரிக்குமாறு அன்போடு வேண்டுகிறோம். .

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.