தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு அரசின் மீது நம்பிக்கையை இழக்கச்செய்கின்றது, மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்துகிறது - தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி- - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, March 21, 2023

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு அரசின் மீது நம்பிக்கையை இழக்கச்செய்கின்றது, மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்துகிறது - தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி-

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு அரசின் மீது நம்பிக்கையை இழக்கச்செய்கின்றது, மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்துகிறது

தமிழக அரசின் நிதி நிலை அறிக்கையை மிகுந்த எதிர்பார்ப்போடு பார்த்து காத்திருந்த ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 2023-2024 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் பள்ளிக்கல்வி துறைக்கு ரூ.40299 கோடி நிதி ஒதுக்கி இருப்பது பாராட்டுக்குரியது. ஆனால் ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளான CPS திட்டத்தை இரத்துசெய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை சரி செய்து சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும், அகவிலைப்படி நிலுவையை வழங்க வேண்டும், ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு செய்தல் போன்ற ஆசிரியர்கள் நலன் சார்ந்த எந்த ஒரு கோரிக்கை பற்றியும் அறிவிப்பு வராதது ஏமாற்றத்தை ஏற்படுத்துகின்றது.

தேர்தல் வாக்குறுதியில் சொன்னதைக்கூட செய்ய மனமில்லாத அரசின் நிதிநிலை அறிக்கை ஆசிரியர்களின் மனதில் ஈட்டியை பாய்ச்சியது போல் உள்ளது. எங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தும் முன் அழைத்துப்பேசி கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.