50 ஆயிரம் பேர் ஆப்சென்ட் ஆனதற்கு பெற்றோரே காரணம்! அமைச்சர் ஆலோசனையில் அதிகாரிகள் ‛பகீர் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, March 16, 2023

50 ஆயிரம் பேர் ஆப்சென்ட் ஆனதற்கு பெற்றோரே காரணம்! அமைச்சர் ஆலோசனையில் அதிகாரிகள் ‛பகீர்

50 ஆயிரம் பேர் ஆப்சென்ட் ஆனதற்கு பெற்றோரே காரணம்! அமைச்சர் ஆலோசனையில் அதிகாரிகள் ‛பகீர்

'பிளஸ் 2 தேர்வில், 50 ஆயிரம் மாணவர்கள் 'ஆப்சென்ட்' ஆனதற்கு, பெற்றோரே காரணம்' என, அமைச்சர் நடத்திய கூட்டத்தில், அதிகாரிகள் கூறியுள்ளனர்.

பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ் தலைமையில், செயலர் காகர்லா உஷா, இயக்குனர் உமா மற்றும் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சுதன் ஆகியோர் அடங்கிய குழுவினர், சென்னையில் நேற்று ஆலோசனை நடத்தினர்.

பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 இடைநிற்றல் மாணவர்கள் மற்றும் புலம்பெயரும் தொழிலாளர் குடும்ப மாணவர்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், தங்கள் மாவட்ட ஆப்சென்ட் மாணவர்கள் நிலவரம் குறித்து, 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக விளக்கினர்.

மாணவர்கள் தேர்வு எழுத வராததற்கு, அவர்களை பள்ளிக்கு அனுப்பாத பெற்றோர் தான் காரணம் என, அவர்கள் தெரிவித்தனர். 'ஆல் பாஸ்' பின், அமைச்சர் மகேஷ் அளித்த பேட்டி:

பிளஸ் 2 பொதுத் தேர்வில், 50 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கவில்லை. அவர்கள் எங்கே போயினர்; ஏன் வரவில்லை என்பது, எங்களுக்கு மிகவும் கவலை அளிக்கிறது.

ஆப்சென்ட் ஆன மாணவர்களில், 38 ஆயிரம் பேர், அரசு பள்ளிகளைச் சேர்ந்தவர்கள்; 8,500 பேர் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் 1,000க்கும் மேற்பட்டவர்கள் தனியார் பள்ளி மாணவர்கள். @kalviseithi

தர்மபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், திருவண்ணா மலை, கள்ளக்குறிச்சி போன்ற சில மாவட்டங்களில், ஆப்சென்ட் ஆன மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. @kalviseithi இதுகுறித்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் பேசி, கள நிலவரம் கேட்டுள்ளோம்.

பத்தாம் வகுப்பில் 'ஆல் பாஸ்' செய்தது, கொரோனா சூழலால் ஏற்பட்ட மனமாற்றம் போன்றவை, மாணவர்கள் பள்ளிக்கும், தேர்வுக்கும் வராமல் தயங்க காரணமாகி உள்ளது.

ஜூனில் சிறப்பு தேர்வு

பிளஸ் 1 தேர்ச்சி பெறாவிட்டாலும், அவர்கள் இடைநிற்றலாகி விடக் கூடாது; தொடர்ந்து படிக்க வேண்டும் என்பதற்காகவே, அவர்களை பட்டியலில் இருந்து நீக்கவில்லை. @kalviseithi

பள்ளிக்கே வராவிட்டாலும், கடைசி நேரத்திலாவது தேர்வு எழுத வரலாம் என்ற நோக்கத்தில், 'ஹால் டிக்கெட்' வழங்கினோம்.

தற்போது தேர்வு எழுத வராதவர்களை கண்டறிந்து, சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்தி, ஜூன் மாதம் சிறப்பு தேர்வில் பங்கேற்க வைக்க முயற்சிப்போம். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு, அடுத்த மாதம் துவங்கும் நிலையில், அதிலாவது ஆப்சென்ட் எண்ணிக்கையை முழுமையாக குறைக்க உரிய முயற்சி மேற்கொள்ளப்படும்.

வரும் 24ம் தேதி மற்றும் ஏப்., 10ம் தேதி, பள்ளி அளவில் மேலாண்மை குழு கூட்டம் நடத்தி, ஆப்சென்ட் எண்ணிக்கையை குறைக்க, நடவடிக்கை எடுக்க உள்ளோம் 'கவுன்சிலிங்'

பெற்றோர், தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல், தங்களுடன் கூலி வேலைக்கு அழைத்துச் சென்றது தெரிய வந்துள்ளது. கொரோனாவுக்கு பின், மாணவர்களுக்கு மட்டுமின்றி, பெற்றோருக்கும் 'கவுன்சிலிங்' தர வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.

பெற்றோரும் பொறுப்பு ணர் வுடன், தங் கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப முன்வர வேண் டும்.

பள்ளிக்கு வராத மாணவர்களுக்கும் சேர்த்தே, அரசின் இலவச பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

மாணவர்களுக்கு தரா விட்டாலும், அந்த பொருட்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இதற்கான கணக்கை பராமரித்து வருகிறோம். இதில் எந்த முறைகேடும் இல்லை.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

நேற்றைய கூட்டத்தில், பள்ளிகள் மற்றும் தேர்வு நடவடிக்கைகளில் முக்கிய பங்கு வகிக்கும், பள்ளிக் கல்வி கமிஷனர் நந்தகுமார், தேர்வுத் துறை இயக்குனர் சேதுராம் வர்மா, மேல்நிலை கல்விக்கான இணை இயக்குனர்கள் பங்கேற்கவில்லை.

பிளஸ் 1 தேர்வு ரத்து இல்லை!

அமைச்சர் அன்பில் மகேஷ் கூறுகையில், ''பிளஸ் 1 பாடங்கள், இன்ஜினியரிங் படிப்பில் முதலாம் ஆண்டில் அதிகம் இடம் பெற்றுள்ளன. பல தனியார் பள்ளிகளில், பிளஸ் 1 பாடம் நடத்தாமல், பிளஸ் 2வை மட்டும் நடத்தி, தங்கள் பள்ளியின் தேர்ச்சி சதவீதத்தை, விளம்பரம் செய்ய விரும்புகின்றனர். இதை மாற்றுவதற்கே, பிளஸ் 1 பொது தேர்வு நடத்தப்படுகிறது. எனவே, அதை ரத்து செய்ய முடியாது,'' என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.