Palli Parvai App - TNSED Administrators - ஆசிரியர்கள் எப்போதும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தல் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, February 27, 2023

Palli Parvai App - TNSED Administrators - ஆசிரியர்கள் எப்போதும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தல்



பள்ளி பார்வை செயலி

தற்போது TNSED Administrators என்ற செயலியில் பள்ளி பார்வை என்ற option மூலம் வகுப்பறை உற்றுநோக்கல் (BRT, DC, DI, BEO, PA, DEEO, CEO, JD, Director வரை) செய்யப்பட உள்ளது. இது சார்ந்த தகவல்கள்.

🔹மேற்கண்ட செயலியில் எந்ததெந்த பள்ளிகள் பார்வையிட வேண்டும் என்ற பட்டியல் வரும்.

🔹பட்டியலில் வரும் பள்ளிக்கு பார்வையிடுபவர் சென்று மேற்கண்ட செயலியில் பார்வையிட வேண்டிய வகுப்பை தேர்வு செய்வார்.

🔹வகுப்பறையில் ஆயத்தப்படுத்துதலிலிருந்து பாடவேளை முடியும் வரை (45 நிமிடம்) முழுமையாக கவனித்து பார்வையிட வேண்டும்.

🔹TLM கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும். 🔹ஆசிரியரின் வகுப்பறை கற்பித்தல் எப்படி உள்ளது என்பதை செயலியில் வரும் கேள்விகளுக்கு பார்வையிடும் அலுவலர் டிக் செய்ய வேண்டும்.

🔹4 line, 2 line, drawing note, maths graph, geometry, subject note இவற்றை ஆசிரியர் கடைசியாக திருத்தப்பட்ட தேதியை செயலியில் பதிவு செய்ய வேண்டும்.

🔹வகுப்பறை கால அட்டவணையில் நூலகத்திற்கு ஒரு பாடவேளை ஒதுக்கி இருக்க வேண்டும்.

🔹நூலக புத்தகம் மாணவர்கள் பையிலிருந்து எடுத்து கொடுக்க வேண்டும். புத்தகத்தில் உள்ள கதை, கருத்துகள் கூற தெரிந்திருக்க வேண்டும். கதை, கருத்துகள் இவற்றை ஏதாவது Activity மூலம் வெளிப்படுத்த வேண்டும்.

🔹வகுப்பறையில் அனைத்து மாணவர்கள் பங்கேற்பு இருக்க வேண்டும்.

🔹எனவே எப்போதும் தயார் நிலையில் ஆசிரியர்கள் இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.