பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை - செய்தி வெளியீடு எண் : 295 நாள்:13.02.2023 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, February 13, 2023

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை - செய்தி வெளியீடு எண் : 295 நாள்:13.02.2023

செய்தி வெளியீடு எண் : 295

நாள்:13.02.2023

செய்தி வெளியீடு

ஹஜ்-2023-ல் ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்பும் நாட்டைச் சேர்ந்த முஸ்லிம் தமிழ் பெருமக்களிடமிருந்து, மும்பையிலுள்ள இந்திய ஹஜ் குழு சார்பாக தமிழ் நாடு மாநில ஹஜ் குழு, ஹஜ் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்திய ஹஜ் குழு மூலம் ஹஜ் 2023-ற்காக விண்ணப்பிக்கும் முறை 10.02.2023 முதல் ஆன்லைனில் தொடங்கி, 10.03.2023 அன்று முடிவடைகிறது. விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் விண்ணப்பத்தை இந்திய ஹஜ் குழு இணையதளம் மூலம் அதாவதுwww.hajcommittee.gov.in என்ற இணையம் வழியாக (அல்லது) மும்பை இந்திய ஹஜ் குழுவின் "HCol" செயலியினை ஆண்ட்ராய்டு கைபேசியில் பதிவிறக்கம் செய்வதன் மூலம் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யலாம். ஹஜ் 2023-ல், விண்ணப்பதாரர்கள் ஹஜ் விண்ணப்பப் படிவத்தை கட்டணம் ஏதுமின்றி இலவசமாக சமர்ப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கோவிட்-19-க்கு எதிரான இரு தவணை தடுப்பூசிகளை செலுத்தி இருக்க வேண்டும்.

இயந்திரம் மூலம் படிக்கத் தக்க பாஸ்போர்ட்டின் முதல் மற்றும் கடைசி பக்கம், வெள்ளை பின்னணியுடன் கூடிய சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம், உறைத் தலைவரின் இரத்து செய்யப்பட்ட காசோலை நகல் அல்லது சேமிப்பு வங்கிக் கணக்கு புத்தக நகல் மற்றும் முகவரிச் சான்றின் நகல் ஆகியவற்றை பதிவேற்றம் செய்யவேண்டும். இந்த ஆண்டு, ஹஜ் பயணிகள் சென்னை புறப்பாட்டுத் தளத்திலிருந்து ஹஜ் பயணம் மேற்கொள்ளலாம். 2. வாழ்நாளில் ஒருமுறை மட்டும் இந்திய ஹஜ் குழு மூலமாக ஹஜ் பயணத்தை மேற்கொள்ளலாம் என்னும் விதிமுறையை இந்திய ஹஜ் குழு செயற்படுத்தி வருகிறது. 10-03-2023 அன்று அல்லது அதற்கு முன்பு வழங்கப்பட்டு, குறைந்தது 03-02-2024 வரையில் செல்லக் கூடிய இயந்திரம் மூலமாக படிக்கத்தக்க பன்னாட்டு பாஸ்போர்ட்டை விண்ணப்பதாரர்கள் வைத்திருக்க வேண்டும். ஹஜ் 2023-ற்கான வழிமுறைகளை இந்திய ஹஜ் குழுவின் இணையதள முகவரி www.hajcommittee.gov.in மூலம் தெரிந்து கொள்ளலாம்..

3. ஆன்லைன் (online) மூலம் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை விண்ணப்பதாரர்கள் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 10-03-2023.

அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.