7th Pay Commission: இந்த தேதி முதல் அரசு ஊழியர்களின் சம்பளத்தில் அதிரடி மாற்றங்கள் 7th Pay Commission: Dramatic changes in salary of government employees from this date
2023ம் ஆண்டின் மார்ச் முதல் வாரத்தில் 65 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் சுமார் 48 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி மற்றும் அகவிலைப்படி நிவாரணம் குறித்து ஒரு பெரிய முடிவு செய்யப்படவுள்ளது. மார்ச் மாதத்தில் ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்த்தப்படலாம் என்று செய்திகள் வெளியாகி வருகிறது. ஏஐசிபிஐ வெளியிட்டுள்ள டேட்டாக்களின் அடிப்படையில் நவம்பருக்குப் பிறகு டிசம்பரில் ஏஐசிபிஐ புள்ளிகள் வீழ்ச்சி அடைந்திருப்பதாக தெரிகிறது. இந்த வீழ்ச்சியின் காரணமாக ஊழியர்கள் எதிர்பார்த்த அளவிற்கு அகவிலைப்படி உயர்வு இருக்காது என்று சில தகவல்கள் தெரிவிக்கிறது. மத்திய அரசில் சம்பளம் பெறும் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் எதிர்பார்த்து காத்து கொண்டிருந்தனர். ஏஐசிபிஐ வெளியிட்டுள்ள 2022ம் ஆண்டின் டிசம்பர் மாத தரவுகளை வைத்து பார்க்கையில் ஊழியர்களுக்கு கண்டிப்பாக 4 சதவீதம் அளவில் அகவிலைப்படி கிடைக்காது என்பது தெளிவாகிறது. தொழிலாளர் அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்ட டிசம்பர் 2022க்கான ஏஐசிபிஐ எண்கள் உண்மையில் நவம்பர் மாதத்திலிருந்து குறைவதைக் காட்டுகின்றன. ஜூலை முதல் நவம்பர் மாதம் வரை, ஏஐசிபிஐ புள்ளிவிவரங்கள் சீரான உயர்வைக் காட்டியதால் அகவிலைப்படி 4 சதவீதம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் டிசம்பரில் ஏஐசிபிஐ எண்ணிக்கை குறைந்ததால் ஒரு கோடிக்கும் அதிகமான மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் எதிர்பார்ப்பு ஏமாற்றத்தில் முடிந்தது.
ஏஐசிபிஐ அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நிலையாக இருக்கும், இருப்பினும், டிசம்பர் மாதத்திற்கான ஏஐசிபிஐ எண்ணிக்கை 132.3 புள்ளிகளாக இருந்தது. எனவே 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வு சாத்தியமாகும். கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 4% உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து ஊழியர்களுக்கான அகவிலைப்படி 38% இருந்தது, இப்போது அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்தினால் ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி 41 சதவீதமாக உயரும். பொதுவாக ஒரு வருடத்தில் இரண்டு தடவை 7வது ஊதியக் குழு மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியில் திருத்தங்களை மேற்கொள்கிறது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.