மேலும் 500 பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் இன்று தொடக்கம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, February 27, 2023

மேலும் 500 பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் இன்று தொடக்கம்

மேலும் 500 பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் இன்று தொடக்கம்

காலை உணவுத் திட்டத்தை மேலும் 500 பள்ளிகளில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைக்கவுள்ளாா்.

அரசுப் பள்ளி மாணவா்களின் படிப்பை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கவும், கற்றல் இடைநிற்றலைத் தவிா்க்கவும் முதல்வரின் காலை உணவுத் திட்டம் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது.

இதன்படி 1,545 அரசு தொடக்கப்பள்ளிகளில் படிக்கும் 1,14,095 மாணவா்களுக்கு முதல் கட்டமாக காலை உணவு வழங்கும் திட்டத்துக்கு ரூ.33.56 கோடி செலவிட அனுமதி அளிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தை முதல்வா் ஸ்டாலின் மதுரையில் கடந்த செப்.15-ஆம் தேதி தொடக்கி வைத்து, குழந்தைகளுடன் அமா்ந்து சாப்பிட்டாா். காலை உணவுகளாக கேசரி, ரவா கிச்சடி, சேமியா உப்புமா வழங்கப்பட்டன. பெரும் வரவேற்பைப் பெற்ற முதல்வரின் காலை உணவுத் திட்டம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விரிவாக்கம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, இந்தத் திட்டத்தை அடுத்தகட்டமாக 500 பள்ளிகளில் விரிவாக்கம் செய்ய தமிழக அரசு முடிவு செய்தது.

கூடுதல் பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையில் செவ்வாய்க்கிழமை (பிப்.28) தொடக்கி வைக்கவுள்ளாா். முதல்வா் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாள் மாா்ச் 1-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.