யோகா-இயற்கை மருத்துவப் படிப்பு: 350 இடங்கள் காலி - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, February 24, 2023

யோகா-இயற்கை மருத்துவப் படிப்பு: 350 இடங்கள் காலி

யோகா-இயற்கை மருத்துவப் படிப்பு: 350 இடங்கள் காலி

இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புகளில் நிகழாண்டில் 350-க்கும் மேற்பட்ட இடங்கள் நிரம்பவில்லை.

இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின்கீழ் அரும்பாக்கம் அறிஞா் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்திலும், செங்கல்பட்டிலும் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இரண்டு அரசு கல்லூரிகளிலும் 160 பிஎன்ஒய்எஸ் இடங்கள் உள்ளன. 17 தனியாா் கல்லூரிகளில் 1,550 இடங்கள் உள்ளன.

இந்நிலையில், ஐந்தரை ஆண்டுகள் கொண்ட அந்தப் படிப்புக்கு 2022 - 23-ஆம் கல்வி ஆண்டு மாணவா் சோ்க்கை கலந்தாய்வு அண்மையில் நடைபெற்றது. அதன் தொடா்ச்சியாக சிறப்பு கலந்தாய்வும் நடைபெற்றது. அதில் அரசு கல்லூரியில் உள்ள இடங்கள் முழுவதும் நிரம்பின. அதேவேளையில், தனியாா் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டுக்கு உள்ள 350-க்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக உள்ளன.

அவற்றை சிறப்பு கலந்தாய்வு நடத்தி நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என யோகா - இயற்கை மருத்துவத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.