TNPSC குரூப் 2, 2A தேர்வுகள் நேரம் மாற்றம் - தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அறிவிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, February 24, 2023

TNPSC குரூப் 2, 2A தேர்வுகள் நேரம் மாற்றம் - தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அறிவிப்பு

TNPSC குரூப் 2, 2A தேர்வுகள் நேரம் மாற்றம் - தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அறிவிப்பு
TNPSC குரூப் 2, 2A தேர்வுகள்:

"மதியம் நடைபெறும் தேர்வு 2:30 மணிக்கு தொடங்கி 5:30 மணி வரை நடைபெறும்"

- தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அறிவிப்பு

குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வில் ஏற்பட்ட குளறுபடி சரி செய்யப்பட்டுள்ளது. மதியம் நடைபெறும் தேர்வு 2.30 மணிக்கு தொடங்கி மாலை 5.30 மணி வரை நடைபெறும் - டி.என்.பி.எஸ்.சி

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் குரூப் 2 மெயின் தேர்வு இன்று தாள்-1 காலையிலும் தாள்-2 மாலையிலும் நடத்தப்படுகிறது.

புதுக்கோட்டையில் மாமன்னர் கல்லூரியில் நூற்றுக்கணக்கானோர் தேர்வு எழுத தேர்வு மையங்களுக்குள் சென்றுள்ளனர். காலை 9.30 மணிக்கு தாள்-1க்கான வினாத்தாள் வழங்கப்பட்டிருக்க வேண்டும் ஆனால் 10 மணியைக் கடந்தும் வினாத்தாள் வழங்கவில்லை. வினாத்தாளில் குழப்பம் இருப்பதால் தேர்வு நடத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. சென்னையில் பல தேர்வு மையங்களில் குரூப் 2 முதன்மை தேர்வு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

துரைப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தேர்வர்களின் பதிவெண்கள் மாறியிருப்பதால் குரூப் 2 முதன்மை தேர்வு தொடங்குவதில் பல இடங்களில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

காலை 9.30 மணிக்கு தேர்வு தொடங்கியிருக்க வேண்டிய நிலையில் இன்னும் வினாத்தாள்கள் வழங்கப்பட்டவில்லை.

கூடுதல் நேரம் வழங்கப்படும்: TNPSC அறிவிப்பு

*குரூப்-2, 2ஏ முதன்மை தேர்வில் ஏற்பட்ட குளறுபடியால் பல்வேறு இடங்களில் இன்னும் தேர்வு தொடங்கவில்லை.

*இந்நிலையில், தாமதம் ஏற்பட்ட தேர்வு மையங்களில் கூடுதல் நேரம் வழங்கப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது

*எத்தனை நிமிடம் தாமதமாக தொடங்குகிறதோ அதற்கேற்ப கூடுதல் நேரம் வழங்கப்படும்; எனவே, தேர்வர்கள் கவலைப்பட வேண்டாம் என்று தெரிவித்துள்ளது.
இதனால் 30 நிமிடங்கள் தாமதமாகத் தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. தேர்வில் குழப்பம் ஏற்பட்டுள்ளதால் தேர்வர்கள் ஒரு பக்கமும் துணைக்கு சென்ற பெற்றோர்கள் வெளியிலும் பதற்றத்தில் உள்ளனர். இதே போன்று தமிழகத்தின் சென்னை மற்றும் தஞ்சாவூர் போன்ற பகுதிகளிலும் தாமதமாகத் தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

மேலும், தாமதமாகத் தேர்வு தொடங்கிய தேர்வர்களுக்கு தேர்வுக்கு உரிய கால அளவான 3 மணி நேரம் முழுமையாக வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.