ஆசிரியர்கள் நலனுக்காக ரூ.225 கோடியில் புதிய திட்டங்கள் - முதலமைச்சர் அறிவிப்பு - Kalviseithi Official

Breaking

Wednesday, March 1, 2023

ஆசிரியர்கள் நலனுக்காக ரூ.225 கோடியில் புதிய திட்டங்கள் - முதலமைச்சர் அறிவிப்பு



"ஆசிரியர்களின் நலனைக் காக்க புதிய திட்டம்" அனைத்து இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் கைக்கணினி வழங்கப்படும்

அனைத்து ஆசிரியர்களுக்கும் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்யப்படும்

உயர்கல்வி பயிலும் ஆசிரியர்களின் குழந்தைகளுக்கான கல்வி செலவு ரூ.50 ஆயிரமாக உயர்வு

"அரசின் நலத்திட்ட உதவிகளை மாணவர்களிடையே சிறப்பாக கொண்டு சேர்க்கும் ஆசிரியர்கள், வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர்"

"சுமார் 225 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டங்கள் செயல்படுத்தப்படும்"

- முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஆசிரியர் சமூகத்தை சிறப்பிக்கவும், ஆசிரியர் நலனை காக்கவும் புதிய திட்டம்: முதலமைச்சர்

ஆசிரியர்கள் நலனுக்காக ரூ.225 கோடியில் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும்: முதலமைச்சர் @kalviseithi

அனைத்து ஆசிரியர்களுக்கும் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்யப்படும் - தமிழக அரசு 'ஆசிரியர்களின் நலனை காக்க புதிய திட்டங்கள்" "அரசின் நலத்திட்ட உதவிகளை மாணவர்களிடையே சிறப்பாக கொண்டு சேர்க்கும் ஆசிரியர்கள், வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர்"
மாணவர்களின் நலனுக்காக அயராது பாடுபட்டு வரும் ஆசிரியர் சமூகத்தை சிறப்பிக்கும் விதமாகவும் ஆசிரியர்களின் நலனைக் காக்கவும் புதிய திட்டங்களை செயல்படுத்த நமது அரசு முடிவு செய்துள்ளது.

மாறிவரும் கற்றல், கற்பித்தல் முறைகளுக்கு ஏற்ப தங்களை சிறப்பாக மெருகேற்றிக் கொள்வதற்கென அனைத்து இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் கைக்கணினி (Tablet) வழங்கப்படும். @kalviseithi
மாணவர் வாழ்க்கை ஏற்றம்காண அயராது உழைக்கும் ஆசிரியர் பெருமக்களின் உடல்நலம் காக்க அனைத்து ஆசிரியர்களுக்கும் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்யப்படும்.

உயர்கல்வி பயிலும் ஆசிரியர்களின் குழந்தைகளுக்காக தற்போது ஆசிரியர் நல நிதியிலிருந்து வழங்கபட்டு வரும் கல்விச் செலவு (tuition fee) ரூ.50,000/- வரை உயர்த்தி வழங்கப்படும்.

அரசின் நலத்திட்ட உதவிகளை மாணவர்களிடையே சிறப்பாக கொண்டு சேர்க்கும் ஆசிரியர்கள், வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர்.

இத்தகு திட்டங்கள் சுமார் 225 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என்ற செய்தியை இந்தத் தருணத்தில் உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

CLICK HERE TO DOWNLOAD PDF

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.