மாணவர் பெயர்ப்பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ளும் பணியினை 10.02.2023-க்குள் முடிக்க தனிக்கவனம் செலுத்த தேர்வுத்துறை இயக்குநர் உத்தரவு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, February 7, 2023

மாணவர் பெயர்ப்பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ளும் பணியினை 10.02.2023-க்குள் முடிக்க தனிக்கவனம் செலுத்த தேர்வுத்துறை இயக்குநர் உத்தரவு

+1 NR Correction - Additional Instructions by DGE

முதன்மைக் கல்வி அலுவலரின் தனிக் கவனத்திற்கு

மார்ச்/ஏப்ரல் 2023 மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வு தொடர்பாக பதிவிறக்கம் செய்யப்பட்ட பெயர்ப்பட்டியலில் திருத்தங்கள் ஏதேனும் இருப்பின் அத்திருத்தங்களை EMIS PORTAL-இல் 03.02.2023 முதல் வரையிலான நாட்களில் மேற்கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 10.02.2023

மாணாக்கரின் பெயர் மற்றும் தலைப்பெழுத்து (ஆங்கிலம் மற்றும் தமிழ்), பிறந்த தேதி, புகைப்படம் (jpge.jpg), பாலினம், வகைப்பாடு (சாதி அடிப்படையிலான வகைப்பாடு), மாற்றுத் திறனாளி வகை, பாடத் தொகுப்பு (Group code), பயிற்று மொழி (Medium of instruction), மொழிப்பாடம் உள்ளிட்ட விவரங்களில் திருத்தங்கள் இருப்பின் அத்திருத்தங்களை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட மாவட்ட EMIS Co- Ordinator-ஐ தொடர்பு கொள்ளுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசியர்களுக்கும் அறிவுறுத்தவேண்டும்.

அவ்வாறு பள்ளித் தலைமை ஆசிரியர்களால் EMIS Co-Ordinator யிடம் கோரப்படும் திருத்தங்களை மேற்கொள்ளும் வகையில் EMIS PORTAL-இல் சம்பந்தப்பட்ட தேர்வரை EMIS Co-Ordinator கள் Release செய்யவும். மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் EMIS Co-Ordinator ஆல் Release செய்யப்படும் தேர்வரின் விவரங்களில் திருத்தங்கள் மேற்கொண்டு Save செய்ய வேண்டும்.

பிறகு மேற்குறிப்பிட்ட தேதிகளில் மேற்கொள்ளப்படும் திருத்தங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு பெயர் பட்டியல் பதிவிறக்கம் செய்வதற்கு DGE PORTAL-இல் பின்னர் வாய்ப்பு வழங்கப்படும்.

பெயர்ப்பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ளும் பணியினை 10.02.2023-க்குள் முடிக்க தனிக்கவனம் செலுத்துமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.