குடியரசு தின உரை - குறிப்புகள் - Republic Day Speech - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, January 25, 2023

குடியரசு தின உரை - குறிப்புகள் - Republic Day Speech

குடியரசு தின உரை - குறிப்புகள்

நம் நாட்டின் பழம் பெருமைக்காகவும் பன்முக மரபுச் சிறப்புக்காகவும் பெருமிதம் அடைவோம் என தினசரி உறுதி ஏற்கிறோம். (நமது காலண்டரில் 12உதாரணம் இருக்கிறது).

4 பெருமை மிகு பாரதம் ஒற்றுமையின்மையால் வீழ்ந்து, அதனை மீட்க ஆயிரம் ஆண்டுகள் போராடினோம்.

4 சுமார் 800 ஆண்டுகள் மொகலாயரை எதிர்த்தும், 200 ஆண்டுகள் ஆங்கிலேயரை எதிர்த்தும் போராடி வெற்றி பெற்றுள்ளோம். சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆனபோதும், நாம் எட்ட வேண்டிய தூரம் வெகு தொலைவில் இருக்கிறது.

ஆனாலும் கடந்த 10 ஆண்டுகளில் நமது நாடு அசுர வளர்ச்சி பெற்றுள்ளது. 4 நாட்டின் பெருமைக்கு தகுந்த விளங்கிட என்றும் பாடுபடுவோம் என தினசரி உறுதி மொழி கூறுகிறோம். எனவே நமது நாட்டின் சமீபத்திய பெருமைகளை அறிந்து பெருமை கொள்வோம்.

பெருந்தொற்று காலத்தில் உலகமே வியக்கும் வண்ணம் நோயை கட்டுபடுத்தினோம். வளர்ந்து நாடுகள் கூட கற்பனை செய்து பார்க்க முடிய அளவாக 219 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தியுள்ளோம். அதிலும் பெருமை கொள்ளும் விஷயமாக 101 நாடுகளுக்கு 24 கோடி டோஸ் ஏற்றுமதி செய்துள்ளோம். உலகின் 3 உயரிய அமைப்புகளுக்கு தலைமை தாங்குகிறோம் 1) G20 நாடுகளுக்கு தலைமை தாங்கு கிறோம். 2) ஐநா சபை Security Council க்கு தலைமை ஏற்கிறோம். 3) Shanghai Cooperation Organisation (SCO) - க்கு தலைமை தாங்குகிறோம்.

ஏற்கனவே நமது வேண்டுகோளை ஏற்று சர்வதேச யோகா தினத்தை உலக நாடுகள் கொண்டாடுகின்றன.

எந்த வளர்ந்த நாடுகளும் செய்ய இயலாத சாதனையாக உக்ரைன் போர் துவங்கியபோது உக்ரைன் ரஷ்யா ஒத்துழைப்போடு 23000 பேரை அங்கிருந்து எவ்வித ஆபத்தும் இன்றி மீட்டோம்.

Digital India வாக உயர்ந்த நம் நாடு சென்ற ஏப்ரல் நிலவரப் படி 10 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு மேல் நம் நாட்டில் டிஜிட்டல் பரிவர்த்தனை நடைபெற்று வருகிறது. இது உலகின் 45 சதவீதமாகும்.

ராணுவ தளவாட உற்பத்தியில் மாபெரும் முன்னேற்றம் அடைந்துள்ளோம்.

சாட்டிலைட் தொழில்நுட்பத்திலும் முன்னோடியாக உள்ளோம். 4 இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் நமது முன்னோர்களான சுதந்திரப் போரட்ட தியாகிகள் சிந்திய ரத்தம்.

4 கத்தியின்றி ரத்தமின்றி பெற்றதல்ல சுதந்திரம். கந்திஜியின் அகிம்சை வழியை நினைவூட்டும் வரிகள் இவை.

ஆங்கிலேயனை எதிர்த்து நடைபெற்ற பாரத சுதந்திரப் போரில் பெரும் பங்காற்றிவர்கள் காந்திஜியும், நேதாஜியும். காந்திஜியின் வெள்ளையனே வெளியேறு போராட்டமும், நேதாஜியால் ஏற்பட்ட மாபெரும் ராணுவப்

புரட்சியும் அந்த கால கட்டத்தில் ஆங்கியேரை நம் நாட்டை விட்டு வெளியேற்றியது. இதனை இங்கிலாந்து பிரதமர் ரிச்சார்டு அட்லி குறிப்பிட்டதாக ஜிடி பக்ஷி அவர்கள் எழுதிய இன்டியன் சாமுராய் என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. 4 சுதந்திர பாரத்தில் நேதாஜியின் பங்களிப்பு இல்லாமல் போனது நமது துரதிஷ்டமே. இறையருளால் அந்த இடத்தை நிரப்பியவர் சர்தார் வல்லபபாய் பட்டேல் அவர்கள். அவருடைய சாதனையாலேயே நமது நாடு மாபெரும் பாரத தேசமாக இணைந்தது. பட்டேலின் அயராத தீவிர உழைப்பினாலேயே ஆங்கியேனின் சதி முறியடிக்கப்பட்டு நாடு ஒன்றிணைந்தது.

சுவாமி விவேகானந்தர் சுதந்திரப் போரில் நேரடியாக பங்கேற்கவில்லை என்றாலும், கந்திஜி, நேதாஜி உள்ளிட்ட பல்லாயிரக் கணக்கான சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு தனது வீர உரையால் உத்வேகம் ஊட்டியுள்ளார். வீர சாவர்க்கர், பகத்சிங், ராஜகுரு, சுகதேவ், உத்தம்சிங், பாலகங்காதர திலகர், பிபின் சந்தர பால் போன்ற எண்ணற்ற தியாகிகள் நாடு முழுவதும் தேச விடுதலைக்கு பெரும் பங்காற்றியுள்ளனர்.

தமிழகத்தில் பாரதியின் கவிதைகள் தமிழர்களை தட்டி எழுப்பியது. வேலு நாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதர்கள், ர வ.ஊ.சிதம்பரனார், சுப்பரமணிய சிவா, வ.வே.சு. ஐயர், வாஞ்சிநாதன், திருப்பூர் குமரன் உள்ளிட்ட எண்ணற்ற தியாகிகளை இன்னாளில் நினைவு கூர்ந்து சுதந்திர பாரதம் காப்போம்.

லஞ்ச ஒழிப்பு, போதை ஒழிப்பு, பயங்கரவாத ஒழிப்பு, மதமாற்ற ஒழிப்பு, நேர்மை, சமுதாயப் பணிக்காக தினசரி நேரம் கொடுத்தல், ஜனநாய கடமையான தவறாமல் வாக்களித்தல், நேர்மையாக நல்லவர்களுக்கே வாக்களித்தல், உலகின் குருவாக பாரதம் உயர கடினமாக உழைத்தல் இவையே அந்த தியாகிகளுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி



CLICK HERE TO DOWNLOAD(Choose Telegram App)

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.