ஜாக்டோ-ஜியோ (JACTTO-GEO) (Joint Action Council of Tamilnadu Teachers Organisations and Government Employees Organisations) 02.01.2023 பத்திரிக்கைச் செய்தி - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, January 2, 2023

ஜாக்டோ-ஜியோ (JACTTO-GEO) (Joint Action Council of Tamilnadu Teachers Organisations and Government Employees Organisations) 02.01.2023 பத்திரிக்கைச் செய்தி

ஜாக்டோ-ஜியோ (JACTTO-GEO)

(Joint Action Council of Tamilnadu Teachers Organisations and Government Employees Organisations)

02.01.2023

பத்திரிக்கைச் செய்தி

ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுடன் சந்திப்பு 4 சதவிகித அகவிலைப்படி உயர்வு வழங்கியதற்கு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு நேரில் நன்றி தெரிவித்தனர்

அகவிலைப்படி தொடர்ச்சியாக ஆறு மாத காலம் தாழ்த்துவதோடு நிலுவைத் தொகையினை மறுப்பது காலவரையின்றி முடக்கப்பட்டுள்ள சரன் விடுப்பு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து மாண்புமிகு முதலமைச்சர் எந்தவித அறிவிப்பும் வெளியிடாததால் 5.1.2023 அன்று மாண்புமிகு முதலமைச்சரின் கவனத்தை ஈர்த்திடும் வகையில் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்களிலும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும்

11.2023 அன்று முதலமைச்சர் அலுவலகத்திலிருந்து வந்த அழைப்பினை ஏற்று, ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை இன்று தலைமைச் செயலகத்தில் அவரது அலுவலகத்தில் சந்தித்தனர். இச்சந்திப்பின்போது, 1.1.2023 முதல் 4 விழுக்காடு அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டதற்கு நன்றியினை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்குத் தெரிவித்துக் கொண்டனர். மேலும், அகவிலைப்படியினை ஒன்றிய அரசு வழங்கிய தேதியில் வழங்காமல் தொடர்ச்சியாக ஆறு மாத காலம் தாழ்த்துவதோடு நிலுவைத் தொகையினை மறுப்பது, காலவரையின்றி முடக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்துதல், இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளைக் களைவது, தொகுப்பூதியம்-சிறப்பு காலமுறை ஊதியம் மற்றும் தினக்கூலியில் பணியாற்றும் ஆசிரியர்கள், சத்துனாவு, அங்கன்வாடி, எம்ஆர்பி செவிலியர், வருவாய் கிராம உதவியாளர், ஊர்ப்புற நூலகர், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் ஆகியோருக்கு காலமுறை ஊதியம் வழங்குவது, சாலைப் பணியாளர்களின் 41 மாத பணிநீக்கக் காலத்தினை முறைப்படுத்துதல், காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்புதல், 21 மாத ஊதியமாற்று நிலுவைத் தொகையினை வழங்குதல் உள்ளிட்ட மாண்புமிகு தமிழக முதலமைச்சர் பங்கேற்ற வாழ்வாதார மாநாட்டில் முதல்வரிடம் ஜாக்டோ ஜியோ சார்பில் வழங்கப்பட்ட ஆசிரியர், அரசு ஊழியர், அரசு பணியாளர் மற்றும் துறை பிரிவு வாரி ஊழியர்களின் வாழ்வாதார கோரிக்கைகள் குறித்து மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடம் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் விரிவாக எடுத்துரைத்தனர்.

இதனைத் தொடர்ந்து, மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டமானது திரு. இரா. தாஸ், திரு. ஆ. செல்வம், திரு. ஜே. காந்திராஜ் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. 5.1.2023 அன்று மாண்புமிகு முதலமைச்சரின் கவனத்தை ஈர்த்திடும் வகையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்களிலும் நடைபெறும் > அடுத்த இயக்க நடவடிக்கைகளைத் திட்டமிடுவதற்காக ஏற்கனவே முடிவு கட்ட செய்யப்பட்டவாறு, எதிர்வரும் 8.1.2023 அன்று மதுரையில் ஜாக்டோ ஜியோ உயர்மட்டக் கூட்டம் நடைபெறும். பிற்பகல் 2.00 மணிக்கு ஒருங்கிணைப்பாளர் கூட்டமும் அதனைத் தொடர்ந்து 3.00 மணிக்கு உயர்மட்டக்குழுக் கூட்டமும் நடைபெறும்.

மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ஜாக்டோ ஜியோ

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.